[X] Close

‘நீங்கள் அவுட்...நடையைக் கட்டுங்கள்’;  ‘நீங்கள் போய் பந்து வீசுங்கள்’: களத்தில் இஷாந்த் சர்மா, கோலி இடையே நடந்த சுவாரஸ்யம்


  • kamadenu
  • Posted: 08 May, 2019 15:22 pm
  • அ+ அ-

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆடிவரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் தனக்கும் விராட் கோலிக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு இஷாந்த் சர்மா அளித்த பேட்டி ஒன்றில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, இஷாந்த் பந்தில் கேட்ச் கொடுத்தார், ஆனால் அது தரையில் பட்டுச் சென்றதாக விராட் கோலி நம்பினார், ஆனால் அது உருப்படியான கேட்ச்தான் என்று இஷாந்த் நம்பினார், இந்நிலையில் இருவருக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டதை இஷாந்த் சர்மா தற்போது வெளியே கொண்டு வந்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:

டி20 கிரிக்கெட்டைப் பொறுத்த வரை விக்கெட் எடுக்காவிட்டாலும் சிக்கனமாக வீசினாலே நாம் நம் பணியைச் சரியாக செய்வதாகவே அர்த்தம். நான் விக்கெட்டுகள் எடுக்கவே விரும்புவேன் ஆனால் நமக்கு இருப்பதோ 4 ஒவர்கள் மட்டுமே.

டெல்லியில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் நான் 4 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்தேன். அப்போது பார்த்திவ் படேலுக்கு வேகம் குறைந்த பந்து ஒன்றை வீச அதை பார்த்திவ் கட் செய்தார், அது ரிஷப் பந்த்திடம் ஒரு பிட்ச் ஆகிச் சென்றது. பிறகு கேகிசோ ரபாடா ஒரு மிஸ்பீல்ட் செய்தார். டாப் எட்ஜ் ஆனது. பிறகுதான் விராட் கோலி என்  பந்தை எட்ஜ் செய்தார். அது நாட் அவுட் என்று கூறப்பட்டது, விராட் கோலி அடுத்த பந்தில் என்னை சிக்ஸ் அடித்தார். அவர் அவுட் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த சிக்ஸ் வந்திருக்காதல்லவா. ஆகவே எனக்குச் சாதகமாக தீர்ப்பு அமைந்திருந்தால் என் அனாலிசிஸ் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். ஒரு விக்கெட்டுக்குப் பதிலாக என் கணக்கில் 3 விக்கெட்டுகள் கிடைத்திருக்கும்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் எப்போதும் அழுத்தம் அதிகம்.

விராட் கோலி எட்ஜ் செய்த பந்து சரியாகவே கேட்ச் ஆனதாக நான் கருதினேன். நான் கோலியிடம் ‘நீ அவுட், நடங்கள், போங்கள்’ என்றேன். அவர் அதற்கு ‘அது பிட்ச் ஆகித்தான் சென்றது நீ போய் பவுலிங் போடு’ என்று பதிலளித்தார். நடுவர் நாட் அவுட் என்றார், அடுத்த பந்து விராட் என்னை சிக்ஸ் அடித்தார்.

ரோஹித் சர்மாவுடன் கூட இப்படி ஒரு வேடிக்கைத் தருணம் அமைந்தது, நான் அவரிடம் ‘அடி’ என்றேன். அதற்கு அவர் இது என்ன பிட்ச் இதில் எப்படி அடிக்க முடியும் என்றார். ஆட்டம் முடிந்தவுடன் நான் ரோஹித்திடம் ‘நீங்கள் பெரிதாக அடிக்கவில்லையே’ என்றேன், அதற்கு அவர் வான்கடேவுக்கு வா பார்க்கலாம் என்றார். அதற்கு நான், ‘உங்களை நான் அவுட் ஆக்கியிருக்கிறேன்’ என்றேன். ஆகவே ஐபிஎல் கிரிக்கெட்டில் இப்படிப்பட்ட கேளிக்கைத் தருணங்கள் உண்டு.

ஆம் நாங்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில்தான் ஆடுகிறோம், ஆனால் இந்திய அணிதான் என் முதல் குடும்பம்.

இவ்வாறு கூறினார் இஷாந்த் சர்மா.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close