[X] Close

அணித்தேர்வாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களே: யுவராஜ் சிங் நழுவல்


  • kamadenu
  • Posted: 03 May, 2019 18:05 pm
  • அ+ அ-

-பிடிஐ

2011 உலகக்கோப்பை சாம்பியன் இந்திய அணியின் தொடர் நாயகனான யுவராஜ்  சிங், உலகக்கோப்பையில் இம்முறை ஹர்திக் பாண்டியா நிச்சயம் நன்றாகச் செயல்படுவார் என்று கூறியதோடு, ஹர்திக் பாண்டியா அன்று கொல்கத்தாவுக்கு எதிராக எடுத்த 34 பந்து 91 ரன்கள்தான் தான் பார்த்த ஐபிஎல் பேட்டிங்கில் சிறந்த இன்னிங்ஸ் என்று விதந்தோதியுள்ளார்.

 

மேலும், செய்தியாளர் இந்திய அணியின் 4ம் நிலைத் தெரிவான விஜய் சங்கர் சரியான தெரிவா என்று கேட்ட போது ‘அணித்தேர்வாளரிடம் கேட்க வேண்டியதை என்னிடம் கேட்கிறீர்கள்’ என்று கூறியதோடு, ரிக்கி பாண்டிங் கோச்சாக இருக்கும் போது சஞ்சய் பாங்கர் மட்டும் ஏன் ஐபிஎல் கோச்சாக இருக்க முடியாது என்று கேட்ட போது ‘நிர்வாகத்தரப்பு கேள்விகளையெல்லாம் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று இருமுறை கருத்து கூறாமல் நழுவினார்.

 

மும்பையில் ஐசிசி உலகக்கோப்பை சார்பாக தனியார் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யுவராஜ் சிங் கூறியதாவது:

 

நான் ஹர்திக் பாண்டியாவுடன் உரையாடினேன், அப்போது அவரிடம், ‘வரும் உலகக்கோப்பையில் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் நன்றாக ஆடும் பார்மில் இருக்கிறாய்’ என்றேன்.

 

கண்டிப்பாக இப்போது அவர் பேட் செய்வதைப் பார்க்கும் போது பிரமாதமாக உள்ளது, பந்து வீச்சு அவ்வப்போது அவருக்குக் கைகொடுக்கிறது. உலகக்கோப்பையில் அவர் அழுத்தம் தரும் சூழ்நிலையை எப்படிக் கையாள்கிறார் என்பதைப் பொறுத்து அவர் ஆட்டம் பரிணமிக்கும்.

 

அவர் பந்தை நன்றாக அடிக்கிரார், பயிற்சி ஆட்டங்கள் முதல் அவரை நான் பார்த்து வருகிறென், இந்த உலகக்கோப்பை உனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த தொடராக அமையும் என்று நான் அவரிடம் தொடர்ந்து கூறிவருகிறேன். அனுபவத்தில் கூறுகிறேன், பந்தை நன்றாக ஒருவர் அடிக்கிறார் என்றால் அவர் சிறந்த பார்மில் இருப்பதாக அர்த்தம். 34 பந்துகளில் 91 ரன்களை அன்று அவர் கேகேஆர் அணிக்கு எதிராக அடித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் நான் பார்த்தமட்டில் சிறந்த இன்னிங்ஸ் ஆகும் அது.  குறிப்பாக தரமான பவுலர்களுக்கு எதிராக அவர் அடித்து ஆடியதால் கூறுகிறேன்.

 

அப்படித் தரமான பவுலர்களை பவுண்டரி, சிக்சர் அடிக்க முடிகிறது என்றால் அவர் நன்றாக பேட் செய்வதாக அர்த்தம்.

 

நம்பர் 4-ம் இடம், விஜய் சங்கர் குறித்த கேள்வி..

 

4ம் இடத்தில் யார் இறக்கப்பட வேண்டும், யார் சரியானவர்கள் என்பதெல்லாம் அணித்தேர்வாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி, என்னிடம் கேட்கிறீர்கள்.. 4ம் இடம் மிக முக்கியமான ஒரு நிலை, ஒட்டுமொத்த தொடரையும் மனதில் கொண்டு அணியைத் தேர்வு செய்துள்ளனர். யார் 4ம் இடத்துக்குப் பொருத்தமானவர்கள் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும், இரண்டு பேர் உள்ளனர், நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

எந்த இடத்தில் பேட் செய்தாலும் அனுபவம் அவசியம். அனைத்து 5 இடங்களும் மிக முக்கியம். இங்கிலாந்து சூழ்நிலை வேறு. நெருக்கடியில் உங்களை நீங்கள் எப்படி நிர்வகிக்கிறீர்கள் என்பதே முக்கியம். உலகின் சிறந்த அணிகல் ஆடுவதால் தொடர்ந்து உங்களை கடும் அழுத்தத்தில்தான் வைத்திருப்பார்கள். அதை எப்படி கையாளப்போகிறோ என்பதே அணியின் குணாம்சத்தைக் காட்டுவதாகும்.

 

ரிக்கி பாண்டிங் சஞ்சய் பாங்கர் குறித்து...

 

ரிக்கி பாண்டிங் ஐபிஎல் கிரிக்கெட்டில் பயிற்சியாளராக இருக்கிறார், சஞ்சய் பாங்கர் ஏன் இல்லை என்றால் அது நிர்வாகத்தரப்பில் கேட்க வேண்டிய கேள்வி, என் கருத்து என்னவெனில் யார் பயிற்சியாளராக இருக்க வேண்டும், கூடாது என்று நான் சொல்லக் கூடாது, நான் வாரியத்தில் இல்லை. ரிக்கி பாண்டிங் ஒரு லெஜண்ட். இளம் வீரர்கள் அவரிடம் கற்றுக் கொள்வது மிக அவசியம். நிறைய கற்றுக் கொள்ளலாம்.

 

சஞ்சய் பாங்கர் நீண்ட காலம் இந்திய பயிற்சியாளராக இருக்கிறார் என்றால் அது அவரது பணிப்பொறுப்புணர்வுக்கு எடுத்துக் காட்டாகும். அனுபவசாலிகள் யார் இருந்தாலும் கற்றுக் கொள்ள நல்ல வாய்ப்பு என்று மட்டுமே நான் கூற முடியும்.

 

இவ்வாறு கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close