[X] Close

ஓய்வு பெறுகிறாரா தோனி? சுரேஷ் ரெய்னா சூசகம்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 21:34 pm
  • அ+ அ-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி இல்லையென்றால் ஒன்றுமில்லாதது போல் தெரிகிறது, அவர் இல்லையென்றால் தோற்கிறது, அவர் ஆடினால் வெற்றி பெறுகிறது காரணம் டி20 கிரிக்கெட்டின் தாத்பரியங்கள் தோனிக்கு முழுதும் அத்துப்படி.

 

எப்போது இறங்க வேண்டும், எப்போது அடிக்க வேண்டும், எப்போது நிதானிக்க வேண்டு, எந்த பவுலரை அடித்து ஆட வேண்டும், எவரிடம் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்பதையும் அதே வேளையில் பிட்ச் உள்ளிட்டவைகளை சரியாகக் கணித்து டாஸில் முடிவுகளை எடுப்பதும் பந்து வீச்சு மாற்றம், களவியூகம், ஸ்பின்னர்களைப் பயன்படுத்தும் விதம், அனைத்திற்கும் மேலாக அந்த அதிவேக ஸ்டம்பிங்குகள்.. என்று தோனி ஒரு டி20 மாஸ்டர் ஆகிவிட்டார் என்றே கூறலாம்.

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராகவும் மும்பை இந்தியன்சுக்கு எதிராகவும் தோனி ஆடவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி தழுவியதோடு தோனி இல்லா சிஎஸ்கே கிங்ஸ் அல்ல என்ற பெயர் எடுத்தது.

 

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா கூறும்போது, “ஒரு கேப்டனாக தோனியை இழப்பது விஷயம் அல்ல. ஒரு பேட்ஸ்மெனாக அவரை இழப்பதுதான் பெரிதாக உள்ளது. இதனால்தான் ஹைதராபாத், மும்பை அணிகளுக்கு எதிரான தோல்வி இப்படிப்பட்டதுதான்.

 

தோனி கிரீசுக்கு வந்தால் என்றார் எதிரணியினருக்குக் கடும் நெருக்கடிகளைக் கொடுக்கிறார். அவர் அணியில் இல்லாவிட்டால் வித்தியாசத்தை நாங்கள் உணர்கிறோம்.

 

நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேட்டிங்கில் நன்றாகச் செயல்பட்டு வருகிறேன். அணியின் நம்பிக்கை அறிவுரையாளராகவும்  நன்றாக செயல்படுகிறேன். ஆகவே அடுத்த ஆண்டு என்னை அதிகம் இவ்வாறு நீங்கள் பார்க்கலாம் குறிப்பாக அவர் (தோனி) முடித்துக் கொள்கிறார் என்றால். ஆனால் அவரது திறமை எனக்குத் தேவைப்படுகிறது, அவரைப்போல் நான் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சென்னைக்காக அவர் விரும்பும் காலம்வரை தொடர்வார்.

 

இவ்வாறு கூறினார் ரெய்னா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close