[X] Close

செய்யுறதும் தெரியாது, சொல்றதும் தெரியாது: சென்னை அணி வெற்றி குறித்து இம்ரான் தாஹிர்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 13:21 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

செய்யுறதும் தெரியாது, சொல்றதும் தெரியாது என்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி குறித்து இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா, தோனி ஆகியோர் அதிரடியாக ரன் குவித்தும், இம்ரன் தகிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்துவீசியும் சிஎஸ்கே அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

இப்போட்டியில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்கள் கைப்பற்றி, சென்னை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். சென்னை அணியின் வெற்றி தொடர்பாக இம்ரன் தகிர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சில பேர் செஞ்சுட்டு சொல்றாங்க. சென்னை அணி செய்யுறதும் தெரியாது, சொல்றதும் தெரியாது. எல்லாரும் எதிர் பாக்குறத நாங்க செய்யமாட்டோம். நாங்க செய்ய போறது என்னன்னு யாரும் எதிர்பார்க்கவும் முடியாது. எடுடா வண்டிய போடுடா விசில்!

இவ்வாறு இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் அடுத்ததாக மே 5-ம் தேதி பஞ்சாப் அணியோடு மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close