[X] Close

வீட்டில் அனுஷ்காதான் கேப்டன்: விராட் கோலி நெகிழ்சி


anushka-sharma-is-the-captain-at-home-says-virat-kohli

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 May, 2018 16:00 pm
  • அ+ அ-

திருமணத்துக்கு முன்னரும் சரி திருமணத்துக்குப் பின்பும் சரி விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி ஊடக வெளிச்சத்தில்தான் உள்ளது.

அனுஷ்காவின் திரைப்பட புரோமோஷன் விழாக்களில் கோலி கவனம் செலுத்துவதும் கோலி கலந்துகொள்ளும் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ரசிகையாக கலந்துகொண்ட அவரை அனுஷ்கா உற்சாகப்படுத்துவதும் என இருவரும் பரஸ்பரம் அன்பைப் பறிமாறிக் கொள்ளும்விதம் அவர்களை ஆதர்ஷ தம்பதிகளாக அனைவர் மத்தியிலும் முன்னிறுத்துகிறது.

அண்மையில் கோலி அளித்த பேட்டி ஒன்றில் தன் மனைவிதான் வீட்டில் கேப்டன் எனக் கூறியிருக்கிறார். அந்தப் பேட்டி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த நேர்காணலைக் கண்டவர், வீட்டில் யார் கேப்டன் என கேள்வி எழுப்ப சற்றும் தயங்காத விராட், "வீட்டில் அனுஷ்காதான் கேப்டன். எங்கள் வாழ்க்கையில் மிகச் சரியான முடிவுகளை அவரே எடுக்கிறார். எனது முழு பலமும் அவர்தான். அவரே என்னை எப்போதும் நேர்மறையான சிந்தனைகளுடன் இருக்கச் செய்கிறார். உங்கள் வாழ்க்கைத்துணையிடம் இருந்து இத்தகைய பலத்தைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்முடியும்.

அனுஷ்காவுக்கு கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் தெரிகிறது. விளையாட்டை அவர் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். அதனால் விளையாட்டு வீரர்களின் உணர்வுகளை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. இதுதான் மிகவும் அழகான விஷயம்" என புன்னகையுடன் சொல்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close