[X] Close

ரசிகர்களுக்கு வித்தியாசமான கோரிக்கை வைத்த ஆன்ட்ரூ ரஸல்: கேக் அபிஷேகத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம்


  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 17:53 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

தன்னுடைய ரசிகர்கள் தன்னை எவ்வாறு அழைக்க வேண்டும் என்பது குறித்து ஆன்ட்ரூ ரஸல் வித்தியாசமான கோரிக்கை வைத்து, தனது 31-வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார்.

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. இன்னும் 2 போட்டிகளில் கட்டாயம் 200 ரன்களுக்கு மேல் அடித்து வெல்ல வேண்டும் அல்லது குறைந்த பந்துகளில் சேஸிங் செய்தால் மட்டும் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே-ஆப் சுற்றுக்குள் செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது.

கொல்கத்தா அணி வீரர் ரஸலின் நாள் என்றுதான் நேற்று கூற வேண்டும். மும்பை அணிக்கு எதிராக ரஸல் அடித்த 40 பந்துகளில் 80 ரன்கள், 2 கேட்சுகள், 2 விக்கெட்டுகள் ஆகியவை ஆட்டநாயகன் விருதைப் பெற்றுக்கொடுத்தன. அதுமட்டுமல்லாமல் தனது 31-வது பிறந்தநாள் அன்று இவை அனைத்தும் நடந்தது ரஸலை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

மாற்றுத்திறனாளி ரசிகருடன் ரஸல் 

வெற்றிக்குப்பின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் மாற்றுத்திறனாளி ரசிகரைச் சந்தித்த ரஸல், அதன்பின் பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு கொல்கத்தா அணியின் சக வீரர்கள் கேக் அபிஷேகம் செய்து ரஸலுக்கு மறக்க முடியாத மகிழ்ச்சியானதருணங்களை பரிசாக அளித்தனர்

முன்னதாக வெற்றிக்குப்பின் ஆன்ட்ரூ ரஸல் ஊடகங்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " நான் அவெஞ்சர்ஸ் தீவிர ரசிகன். எப்போது நேரம் கிடைத்தாலும் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை பார்த்துவிடுவேன். அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் வரும் சூப்பர் ஹீரோக்கள் போல், என்னையும் எனது ரசிகர்கள் சூப்பர் ஹீரோ என்று அழைத்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

cake.jpg 

கண்ணும், கையும் ஒருங்கே செயல்படுதல், பேட்டை சுழற்றுதலில் நல்ல வேகம், சமநிலை ஆகியவை அதிரடி ஆட்டத்துக்கு முக்கியமானவை. அதிலும் குறிப்பாக தோள்பட்டையில் இருந்து அதிகமான சக்தியை பேட்டை நோக்கி நாம் செலுத்த வேண்டும். அதற்கு உடலை நாம் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக உயரமான ஷாட்களை அடிக்க உடல் வலிமையாக இருப்பது அவசியம்.

ரஸலின் பிறந்தநாள் கொண்டாட்டம் 

அதிலும் பந்துவீச்சாளர் தான் புத்திசாலி என்பதை காட்டும் வகையில் ஸ்லோ பந்துவீசினாலோ அல்லது வைடு பந்து வீசினாலோ, நாம் அடிக்கும் ஷாட்கள் அவருக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

vake.jpg 

அடுத்த இரு போட்டிகளிலும் நாங்கள் வெல்லும் முனைப்போடு இருக்கிறோம். அடுத்த இரு போட்டிகளை நாங்கள் வென்றுவிட்டால், டி20 வாழ்க்கையில் மறக்கமுடியாத நாட்களாக அமையும். முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டாலே வெற்றி உறுதியாகிவிடும். நெருக்கடியான நேரங்களில் நாங்கள் அமைதியாக  இருந்து, எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு ரஸல் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close