[X] Close

பார்திவ் படேல் அமர்க்களம்: 'பவர்ப்ளே ஸ்டிரைக் ரேட்டில்' டீகாக், வார்னர், பட்லரை மிஞ்சினார்


  • kamadenu
  • Posted: 28 Apr, 2019 18:52 pm
  • அ+ அ-

12-வது ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் பார்திவ் படேல் வைத்துள்ள பவர்ப்ளே பேட்டிங் ஸ்டிரைக் ரேட்,  டீகாக், வார்னர், பட்லர் அனைவரையும் காட்டிலும் அதிகமாக இருக்கிறது.

பார்திவ் படேல் கடந்த 2002-ம் ஆண்டு தனது 17 வயதில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அதன்பின் இந்திய அணியில் சீராக இடம் பெறத் தொடங்கினார். ஐபிஎல் போட்டித் தொடங்கப்பட்ட பின், முதல் மூன்று சீசன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பார்திவ் இடம் பெற்றார்.

அதன்பின் கொச்சி டஸ்கர்ஸ் அணியிலும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலும் பார்திவ் இருந்தார். கடந்த 2014ம் ஆண்டு ஏலத்தில் பெங்களூரு அணி பார்தீவ் படலே விலைக்கு வாங்கியது. அதன்பின் 2015-ம் ஆண்டு மும்பை அணிக்காக சில ஆண்டுகள் இருந்துவிட்டு, அதன்பின் 2018-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பராகவும், முக்கிய தொடக்க ஆட்டக்காரராகவும் தொடர்ந்து வருகிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தொடர்ந்து தோல்விகளை அடைந்தாலும் அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் பார்திவ் படேல் கணிசமாக ரன்களை குவித்து வருகிறார். இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 12 ஆட்டங்களில் ஆடியுள்ள பார்திவ் படேல்  2அரைசதங்கள் உள்பட  365 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 67 ரன்கள் சேர்த்துள்ளார்.

தான் பேட்டிங் செய்யும் அனைத்துப் போட்டிகளிலும் தன்னுடைய ஸ்டிரைக் ரேட் குறையாமல் பார்திவ் படேல் விளையாடி வருவதுதான் அவரின் சிறப்பம்சமாகும்.

parth.jpg 

கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து விளையாடிவரும் பர்தீவ் படேலின் ஸ்ட்ரைக் ரைட் 100-க்கு குறைநத்து இல்லை. அதிலும் கடந்த சீசனிலும், இந்த ஐபிஎல் சீசனிலும் பர்தீவ் தன்னுடைய ஸ்டிரைக் ரேட்டை 140க்கு குறையாமல் வைத்து வருகிறார்.

டெல்லியில் தற்போது நடந்துவரும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் பார்திவ் படேல்  20 பந்துகளுக்கு 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதில் ஒருசிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். இதிலும் இவரின் ஸ்டிரைக் ரேட் 195 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பவர்ப்ளேயில் பார்தீவ் ஸ்டிரைக்கிங் ரேட் 147.95 வைத்துள்ளார். முன்னணி வீரர்களான டீகாக் 144, டேவிட் வார்னர் 142, ஜோஸ் பட்லர் 139 மட்டுமே ஸ்டிரைக் ரேட்டாக வைத்துள்ளனர். ஆனால், கெயில், பேர்ஸ்டோ ஆகியோர் பார்தீவ் படேலைக் காட்டிலும் அதிகமாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close