[X] Close

இப்படியா அவுட் ஆவது? ஷிகர் தவண் ஆட்டமிழப்பைச் சாடிய பிராட் ஹாக்


  • kamadenu
  • Posted: 28 Apr, 2019 17:38 pm
  • அ+ அ-

-Muthukumar R_50162

டெல்லியில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2019-ன் 46வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்து வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 131/4 என்ற  ரன் எண்னிக்கையில் உள்ளது.

 

இங்க்ரம், ருதர்போர்டு களத்தில் இறுதி ஓவர்களை எதிர்கொள்ள ஆடிவருகின்றனர்.

 

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.  இதில் பிரிதிவி ஷா 4 தடாலடி பவுண்டரிகளுடன் விராட் கோலியை அச்சுறுத்திய நிலையில் 18 ரன்களில் உமேஷ் யாதவ்வின் கூடுதல் பவுன்ஸ் கொண்ட பந்தை கட் ஆட முயன்று பார்த்திவ் படேலிடம் கேட்ச் அகை வெளியேறினார்.

 

ஷிகர் தவண் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 50 ரன்களை எடுத்த நிலையில்  சாஹல் மெதுவாக ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாகத் தூக்கி வீசினார். அதனை ஆஃப் திசையில் ஆடியிருக்க வேண்டும் ஆனால் அவர் முன் கூட்டியே ஸ்லாக் ஸ்வீப் என்று தீர்மானித்து தன்னை அதற்காக நிலைப்படுத்திக் கொண்டு வைடாகச் சென்ற பந்தை வாரிக்கொண்டு அடிக்கப் பார்த்தார், பந்து மட்டையின் மேல் முனையில் பட்டு எழும்பியது. வாஷிங்டன் சுந்தரிடம் லெக் திசையில் அருகிலேயே கேட்ச் ஆக தவண் வெளியேறினார்.

 

தவண்  ரன் விகிதம் கொஞ்சம் மந்தமடைந்ததால் அடித்து ஆட நினைத்தார், ஆனால் ஷாட் தேர்வு தவறு.. இதனைச் சுட்டிக்காட்டிய ஆஸ்திரேலிய முன்னாள் இடது கை சைனமன் பவுலர் பிராட் ஹாக், தன் ட்விட்டர் பக்கத்தில்,

 

“டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மென்கள் லெக் திசையில் ஷாட்களைத் தேர்வு செய்வது அதிர்ச்சியாக உள்ளது. பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக பிட்ச் ஆகிறது அதை ஏன் ஆன் திசையில் வளைக்க வேண்டும். சாஹலுக்கு சுலபமாக ஒரு விக்கெட். ஆர்சிபிக்கு தன் விக்கெட் மூலம் கதவைத் திறந்து விட்டுள்ளார் ஷிகர் தவண்” என்று சாடியுள்ளார்.

 

நன்றாகச் செட்டில் ஆகிவிட்டு நின்று கடைசி வரை ஆடியிருந்தால் டெல்லி கேப்பிடல்ஸ் ஸ்கோர் இன்னும் வலுவான நிலைக்குச் சென்றிருக்க வாய்ப்புண்டு, ஆனால் ஷிகர் தவண் 50 ரன்களில் திருப்தி அடைந்து 13வது ஓவரிலேயே வெளியேறினார்.

 

சாஹல் 4 ஓவர் 41 ரன்கள் என்று சாத்து வாங்கினாலும் முக்கியக் கட்டத்தில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  இதில் 4 சிக்சர்களை அவர் கொடுத்தார், ஷ்ரேயஸ் அய்யர், சாஹலை மட்டும் 3 சிக்சர்கள் விளாசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close