[X] Close

கால் இறுதியில் சிந்து, சாய்னா


  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 09:15 am
  • அ+ அ-

-பி.டி.ஐ,

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினர்.

சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 68-ம் நிலை வீராங்கனையான இந்தோனேஷியாவின் சோயருன்னிஸாவுடன் மோதினார். 33 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-15, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் சிந்து, 17-ம் நிலை வீராங்கனையான சீனாவின் காய் யன்யனுடன் மோதுகிறார்.

9-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால் தனது 2-வது சுற்றில் 21-13, 21-13 என்ற நேர் செட்டில் 12-ம் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் ஹன் யியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 38 நிமிடங்கள் நடைபெற்றது. கால் இறுதியில் சாய்னா நெவால், 3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் மோதுகிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சமீர் வர்மா 21-12, 21-19 என்ற நேர் செட்டில் ஹாங் காங்கின் லாங் அங்குஸை தோற்கடித்தார். 15-ம் நிலை வீரரான சமீர் வர்மா கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீரரான சீனாவின் ஷியூ-வை எதிர்கொள்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close