[X] Close

ரிஷப் பந்த்தின் 36 பந்து 78 ரன் அதிரடி இன்னிங்ஸ்: அசந்து போன இரண்டு முன்னாள் லெஜண்ட்கள்


36-78

  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 18:34 pm
  • அ+ அ-

-பிடிஐ

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் நேற்று அஜிங்கிய ரஹானேயின் சதத்தைப் பின்னுக்குத் தள்ளிய ரிஷப் பந்த்தின் ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

அதுவும் முன்னாள் லெஜண்ட்களான  ‘தாதா’ கங்குலி, ஆஸி. சூரப்புலி ரிக்கி பாண்டிங் ஆகியோரது பாராட்டு கிடைக்கிறது என்றால் அது சாதாரணமல்ல.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 36 பந்துகளில் 78 ரன்களை விளாசிய ரிஷப் பந்த் சில திகைப்பூட்டும் ஷாட்களை ஆடினார், அதில் குறிப்பாக தவல் குல்கர்னி வீசிய பந்தை அனாயசமாக ஹை பிளிக்கில் லெக் திசையில் சிக்ஸ் தூக்கியதும், ஜோப்ரா ஆர்ச்சர் அருமையாக வீசிய தருணத்தில் அவரது பந்தை லாங் ஆனில் அடித்த சிக்ஸரும் மறக்க முடியாதவை என்பதோடு டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றியை உறுதி செய்தது.

 

ரிஷப் பந்த் ஆடிய இன்னிங்ஸ் முடிந்தவுடன் கங்குலி களத்தில் புகுந்து அவரைத் தூக்கியே விட்டார், அதன் பிறகு தன் ட்விட்டில், “ரிஷப் பந்த் இதற்கு  நீ தகுதியானவனே” என்று பதிவிட்டார்.

 

192 ரன்கள் இலக்கை தன் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் இன்னிங்ஸ் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எளிதில் வெற்றியை உரித்தாக்கினார் பந்த்.

 

ரிக்கி பாண்டிங் கூறும்போது, “உலகக்கோப்பையில் தான் தேர்வு செய்யப்படாதது அவருக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும் என்பது எனக்குப் புரிகிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணித்தேர்வு தவறாக முடிவு செய்யப்பட்டது. இங்கிலாந்து மண்ணில் இவர் அடித்து நொறுக்கியிருப்பார். அதாவது மிடில் ஓவர்களை ஸ்பின்னர்கள் ரிஷப் பந்த்திற்கு வீச முடியாது.

 

உலகக்கோப்பையில் அவர் என்ன செய்திருப்பார் என்பதை பார்க்க ஆவலுடன் இருந்தது. அவர் இன்னும் 3-4 உலகக்கோப்பைகள் ஆடும் அளவுக்குத் திறமை கொண்டவர் என்று நான் அப்போதே கூறினேன். அவர் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் அவ்வளவே.

 

ரிஷப் பந்த் போன்ற சரவெடி பேட்ஸ்மென்களுக்கு பந்தில் கொஞ்சம் வேகம் இருந்தால் பிடிக்கும். அதைத்தான் இந்த இன்னிங்சில் பார்த்தோம், மும்பையிலும் 20 பந்துகளில் 70 ரன்களை விளாசியதைப் பார்த்தோம்.

 

அவர் வேறொரு கிரகத்தில் இருக்கிறார். அவர் ஒரு அதிசய திறம் படைத்த வீரர். உண்மையான போட்டியாளர், வெற்றியாளர், இந்த சூழ்நிலைகளை அவர் மிகவும் விரும்புகிறார். இந்தத் தொடரில் நல்ல அறிகுறிகள் அவருக்கு தென்படத் தொடங்கியுள்ளன” என்றார் ரிக்கி பாண்டிங்.

 

கங்குலி கூறும்போது, “ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் உண்மையான மேட்ச் வின்னர்கள், அவர்களிடம் மாற்றிக்கொள் என்று  சொல்ல வேண்டிய தேவையில்லை. 4-5 போட்டிகளில் அவர்கள் சோபிக்காமல் கூட போகலாம் ஆனால் அவருக்கான நாளில் தனிநபராக வெற்றி பெற்றுக் கொடுக்கக் கூடியவர். இதனால்தான் இவர் முக்கியமானவர்..” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close