[X] Close

உ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 21:26 pm
  • அ+ அ-

இங்கிலாந்தில் நடைபெறும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொருவரும் அனைவருடனும் ஆட வேண்டும் என்ற வடிவத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன, இதில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஜூன் 16ம் தேதியன்று களைகட்டுகிறது.

 

இதுவரை உலகக்கோப்பையில் பாகிஸ்தான் இந்திய அணியை வென்றதேயில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பாக பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமெட் கூறியதாவது:

 

எங்களைப் பொறுத்தவரை 9 போட்டிகளும் மிக முக்கியமானவை ஆகவே எல்லா போட்டிகளையும் இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போன்றே ஆடுவோம். சமீபத்தில் பெரிய தொடரில் இந்தியாவை வீழ்த்தியுள்ளோம். ஆகவே எங்களுக்கு அந்த சாதக நிலை உள்ளது.

 

எங்கள் அணிதான் உலகக்கோப்பையை வெல்லும் என்று பேசப்பட்டு நாங்கள் உலகக்கோப்பைக்குச் சென்றால் அது எங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும் ஆனால் பலவீனமான அணி என்ற நிலையில் சென்றால் அப்போதுதான் மற்ற அணிகள் அபாயத்தை உணர்வார்கள். ஆகவே பலவீனமான அணி என்ற அடையாளம் அணி மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது.

 

இவ்வாறு கூறினார் சர்பராஸ் அகமெட். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 5-0 என்று ஒயிட்வாஷ் உதை வாங்கியது நினைவுகூரத் தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close