[X] Close

உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 13:16 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

இங்கிலாந்தில் வரும் மே மாதம் இறுதியில் நடைபெற உள்ள உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலகக்கோப்பைப் போட்டிக்கான அணிகளை ஒவ்வொரு நாட்டு அணியும் அறிவித்து வருகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம்,  பாகிஸ்தான் ஆகிய அணிகள் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவித்துவிட்டன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியும் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

aff.jpg 

இந்த 15 பேர் கொண்ட அணிக்கு குலாம் நபி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஹமித் ஹசன் சேர்க்கப்பட்டுள்ளார். 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹசன், 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர அலிஹில், கரீம் ஜனத், சயித் ஷர்தன் ஆகியோர் ஸ்டான்ட்-பை வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்.ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 1-ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்:

குலாம் நபி(கேப்டன்), முகமது ஷாசாத்(விக்கெட் கீப்பர்), நூர் அலி ஜத்ரன், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆப்கன், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, நஜ்புல்லா ஜத்ரன், ஷமிமுல்லா ஷின்வாரி, முகமது நபி, ரஷித் கான், தவ்லத் ஜத்ரன், அப்தப் ஆலம், ஹமித் ஹசன்,முஜிப் உர் ரஹ்மான்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close