[X] Close

கடைசி ஓவரில் தோனி எங்களுக்கு மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டார் : மிரட்சியில் விராட் கோலி


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 10:04 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

கடைசி ஓவரில் தோனி தன்னால் எந்த அளவுக்கு சிறப்பாக விளையாடமுடியுமோ அதை வெளிப்படுத்தி எங்களுக்கு பயத்தை காட்டிவிட்டார் என்று ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மிரட்சியுடன் குறிப்பிட்டார்.

பெங்களூரில் நேற்று ஐபிஎல்டி20 போட்டியின் 39-வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் வீசிய ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, 2 ரன்கள் என 24 ரன்கள் சேர்த்தார். ஆனால், கடைசிப்பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரன் அவுட் ஆகினார் தாக்கூர். ஒரு ரன்னில் வெற்றிவாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்தது, இறுதிவரை ஆட்டமிழக்காமல் தோனி 48 பந்துகளுக்கு 84 ரன்கல் சேர்த்தார் இதில்7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.

parthic.jpg 

கடைசி ஓவரில் தோனி அடித்த ஒவ்வொரு ஷாட்களையும் பார்த்தபோது, விராட் கோலியின் முகத்தில் பதற்றமும், பயமும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் வெற்றி பெற்றபின்தான் விராட் கோலியின் முகத்தில் புன்னகையை பார்க்க முடிந்தது.

வெற்றிக்குபின் ராயல்சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறுகையில், " போட்டி முழுவதும் உணர்ச்சிகளால் நிரம்பி இருந்தது. 19-வது ஓவர் வரை நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். கடைசி ஓவரில் கடைசிப்பந்தில் நடந்த ரன்அவுட் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். அதுபோல் நடந்துவிட்டது. சிறிய அளவு ரன் வித்தியாசத்தில் போட்டியில் வென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எம்.எஸ்.தோனி தன்னால் என்ன சிறப்பாகச் செய்யமுடியுமோ, அடிக்கமுடியுமோ அடித்தார். எங்கள் ஒட்டுமொத்த அணிக்கும் தோனி மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டார் " எனத் தெரிவித்தார்.

சிஎஸ்கே கேப்டன் தோனி இந்த போட்டியில் அடித்த 48 பந்துகளுக்கு 84 ரன்கள் என்பதை ஐபிஎல் போட்டியில் அவரின் அதிகபட்ச ஸ்கோராகும். அதுமட்டுமல்லாமல் கேப்டனாக பொறுப்பேற்று நேற்றைய ஆட்டத்தில் 4 ஆயிரம் ரன்களை தோனி எட்டினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close