[X] Close
 

எங்கள் பேட்டிங்கில் பிரச்சினை இருக்கிறது: பஞ்சாப் கேப்டன் அஸ்வின் வருத்தம்


ashwin-punjab-batting-woes

சக பஞ்சாப் வீரர்களுடன் அஸ்வின் | கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 15 May, 2018 17:16 pm
  • அ+ அ-

கிங்ஸ் 11 பஞ்சாப் அணியில், பேட்டிங்கில் பிரச்சினை இருக்கிறது என அணியின் தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். 

திங்கட்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. பஞ்சாப் அணி கடந்த 2 போட்டிகளில், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளிடம் அடைந்த தோல்விகளைத் தொடர்ந்து இது மூன்றாவது தோல்வியாகும். இது குறித்து அஸ்வின் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

"எங்கள் பேட்டிங்கில் பிரச்சினை இருக்கிறது. உண்மையாகச் சொன்னால் எங்கள் அணி சாம்பியன் அணிகளில் ஒன்றல்ல. தொடரின் முதல் பாதியில் எங்கள் திறமைக்கும் அதிகமாக உழைத்தே நாங்கள் வெற்றி பெற்றோம். இப்படியான சூழலில் நாங்கள் இருப்போம் என்பதை நான் முன்னமே கணித்தேன். ஆனால் இவ்வளவு மோசமாக அல்ல. இன்னும் 2-3 போட்டிகளில் வென்று, 14 அல்லது 16 புள்ளிகளைப் பெற்றுவிடுவோம் என்றே நினைத்தேன். 

இந்த மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்பவர்களை கட்டுப்படுத்துவது கடினம். சரசாரியான ஸ்கோரை விட அதிகமாக அடிக்க முற்பட்டு விக்கெட்டுகளை இழந்ததே நாங்கள் செய்த தவறு என நினைக்கிறேன். சூழலுக்கு ஏற்றவாறு நாங்கள் ஆடவில்லை" என அஸ்வின் பேசினார்.

இந்தத் தோல்வியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு சரிந்துள்ளது. மிடில் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தைப் பற்றி கேட்டபோது, "இதற்கு முன் நான் சிஎஸ்கே என்ற் அணிக்காக விளையாடினேன். அதில் முரளி விஜய் என்கிற பேட்ஸ்மேன் லீக் போட்டிகளில் ரன்களே எடுக்கவில்லை. ஆனால் இறுதிப் போட்டியில் 95 ரன்களை எடுத்தார். பெரிய தருணங்களில் தான் பெரிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவார்கள். இது ஒன்றும் பெரிய விஞ்ஞானம் அல்ல. ஆடுபவர்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் போதும்" என்று அஸ்வின் பதிலளித்தார். 

அடுத்து வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டியில், களத்தின் தன்மை வெளிநாட்டு வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என தான் நம்புவதாகவும். எனவே தனது அணியில் இருக்கும் வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக ஆடி அணிக்குத் தேவையான வெற்றியைப் பெறுவார்கள் என்று அஸ்வின் கூறினார். 

- ஐஏஎன்எஸ்

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close