[X] Close

பட்டம் வென்றார் பேபியோ போக்னி


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 08:41 am
  • அ+ அ-

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இத்தாலி வீரர் பேபியோ போக்னி சாம்பியன் பட்டம் வென்றார்.

மொனாக்கோவில் நடைபெற்று வந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று 13-ம் நிலை வீரரான இத்தாலியின் பேபியோ போக்னி, 48-ம் நிலை வீரரான செர்பியாவின் டசன் லஜோவிச்சை எதிர்த்து விளையாடினார். இதில் பேபியோ போக்னி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம் மொனாக்கோ டென்னிஸ் போட்டியில் சுமார் 51 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையை பெற்றார் பேபியோ போக்னி. கடைசியாக 1968-ம் ஆண்டு அந்த நாட்டைச் சேர்ந்த நிக்கோலா பீட்டர்ஏஞ்சலி பட்டம் வென்றிருந்தார். - ஏஎப்பி

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close