[X] Close

கேப்டன்சி மாற்றம் கைகொடுத்தது: ஸ்மித் தலைமையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 21:05 pm
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 36வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அதன் புதிய கேப்டன் ஸ்மித் தலைமையில் மீண்டும் வெற்றி பெறும் வழியைக் கண்டுபிடித்துக் கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தத் தொடரில் தங்களது 3வது வெற்றியைத்தான் பெற்றுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

 

டாஸ் வென்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மந்தமான பிட்சில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெடுகள் இழப்புக்கு 161 ரன்களை எடுக்க தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 162/5 என்று அபார வெற்றி பெற்றது.

 

ஆட்டம் தொடங்கும் ஒரு மணி நேரம் முன்புதான் கேப்டன்சி மாற்றத்தை அறிவித்தது ராஜஸ்தான் ரஹானேவுக்குப் பதில் ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மிகப்பிரமாதமாக வீசிய லெக் ஸ்பின்னர் ஷ்ரேயஸ் கோபால் 4 சிக்கனமான ஓவர்களில் 21 ரன்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அதிக ரன்கள் எடுத்த குவிண்டன் டி காக் (65) ஆகியோர் க்கெட்டுகளை முக்கியக் கட்டத்தில் கைப்பற்றியதும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் ஒரு அற்புதமான பவுலிங்கில் 22 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியா விக்கெட்டையும் கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணியைக் கட்டிப்போட்டது.

 

shreyas gopal.jpg 

 

மீண்டும் அதிவிலை வீரர் உனாட்கட் சொதப்பி 4 ஓவர் 46 ரன்கள் 1 விக்கெட் என்று அடி வாங்கினார். ஸ்டூவர்ட் பின்னி 3 ஓவர் 19 ரன் ஒரு விக்கெட் என்று சிக்கனம் காட்டினார். இத்தனைக்கும் குவிண்டன் டி காக், சூரியகுமார் யாதவ் (34) கூட்டணியுடன் 10 ஓவர்களில் 81/1 என்று இருந்த மும்பை இந்தியன்ஸ் கடைசியில் 161/5 என்று கட்டுப்பட்டது.

 

 

ஆர்ச்சர், ஜெயதேவ் உனாட்கட் கடைசி 6 ஓவர்களில் 5 ஓவர்களை வீசினர் இதில் 52 ரன்கள் வந்தது. இதில் ஜோப்ரா ஆர்ச்சர் மொத்தம் தனது 4 ஓவர்களில் 22 ரன்கள்தான் கொடுத்தார்.  இலக்கை விரட்டும் போது மும்பை லெக் ஸ்பின்னர் சாஹர் ஒரே ஓவரில் சஞ்சு சாம்சன் (35), பென் ஸ்டோக்ஸ் (0) ஆகியோருடன் முன்னதாக ரஹானேவையும் வீழ்த்த 8 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் 77/3 என்று தடுமாறியது.

 

கடைசியில் ஸ்மித் 48 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சுடன் 59 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ இவருடன் இளம் அஸாம் வீரர் ரியன் பராக் 29 ப43 ரந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 43 ரன்கள் எடுக்க இருவரும் சேர்ந்து 9 ஓவர்களில் 70 ரன்கள் கூட்டணி அமைக்க ஸ்கோர் 147 என்று மும்பை நிர்ணயித்த இலக்கை நெருங்கியது.  பிறகு வெற்றியும் பெற்று 9 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று இன்னும் 7ம் இடத்தில்தான் உள்ளது, ஆனாலும் அணிக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது, அதுவும் ஜோஸ் பட்லர் என்ற அதிரடி மன்னன் இல்லாமலேயே. மும்பை அணி 12 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.

 

குவிண்டன் டி காக் அபாரம்:

 

de.jpg 

 

மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மாவை 5 ரன்களில் இழந்தது, சாஹர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். குவிண்டன் டி காக் 4 ரன்களில் இருந்த போது ஜோப்ரா ஆர்ச்சர் பவுண்டரி அருகே ஓடி வந்து டைவ் அடித்தும் கேட்ச் தரை தட்டியதால் பிழைத்தார். வழக்கம் போல் கேட்ச் விட்டால் என்ன ஆகும், அடுத்த தவல் குல்கர்னி ஓவரில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் விளாசினார் அதன் பிறகு இதே குல்கர்னி பந்தை விக்கெட் கீப்பர் பின்னால் ஸ்கூப் செய்து 34 பந்துகளில் அரைசதம் கண்டார். சூரிய குமார் யாதவ் எதிர்பார்த்த வகையில் வேகமாக ஸ்கோர் செய்ய முடியவில்லை அவர் 33 பந்துகளில் 34 ரன்கள்தான் எடுத்தார். அதில் ஒரேயொரு சிக்ஸ்மட்டுமே அடித்தார். இவர் மந்தமாக ஆடியதால் டி காக் ஒரு முனையில் அழுத்தம் பெற்றார். இதனையடுத்து இவரும் 65 ரன்களில் வெளியேற ஹர்திக் பாண்டியா (23), கெய்ரன் பொலார்ட் (10)  பென் கட்டிங் (13 நாட் அவுட்) ஆகியோர் சிறு பங்களிப்பு செய்து ஸ்கோரை 161/5 என்று கொண்டு வைத்தனர்.

 

rahul chahar.jpg 

 

இலக்கை விரட்டியபோது ஜோஸ் பட்லர் இல்லாததால் சஞ்சு சாம்சனும் ரஹானேவும் இறங்கினர், சஞ்சு சாம்சன் ஹர்திக் வீசிய முதல் ஒவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகள் விளாசினார். பிறகு சகோதரர் குருணால் பாண்டியா ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி விறுவிறுவென 20 ரன்களைக் கடந்தார். ரஹானே12 ரன்களில் சாஹரிடம் வெளியேறினார். ஸ்மித் இறங்கியவுடன் பவர் ப்ளெயில் ஸ்கோர் 60 ஆக உயர்ந்தது. ஆனால் 35 ரன்களில் சஞ்சு சாம்சனையும் அதே ஓவரில் பென் ஸ்டோக்சையும் இரண்டு நல்ல பந்துகளில் ராகுல் சாஹர் வெளியேற்ற ராஜஸ்தான் தடுமாற்றத்துடன் 77/3 என்று இருந்தது, ஆனால் ஸ்மித் இருந்ததால் ரன் விகிதம் சரியாகச் சென்று கொண்டிருந்தது.

 

ஆனால் அஸாமைச் சேர்ந்த 17 வயது இளம் வீரர் ரியான் பராக் ஸ்மித்துடன் இணைந்து 5 பிரமாதமான பவுண்டரிகள் 1 சிக்சருடன் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆன போது ராஜஸ்தான் ராயல்ஸ் 147 ரன்கள் என்று வெற்றிக்கு அருகில் வந்தது, பிறகு ஸ்மித், பின்னி முடித்து வைத்தனர். ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close