[X] Close

ஆம்! விஜய் சங்கர் 3டி ப்ளேயர் தான்: அம்பதி ராயுடுவுக்கு விராட் கோலி மறைமுக பதில்


3

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 20:59 pm
  • அ+ அ-

ஆம். விஜய் சங்கர் அணியின் சமச்சீர் தன்மைக்கு வலுசேர்க்கிறார்.. அவரிடம் ஆல்ரவுண்ட் திறமைகள் இருக்கிறது என்று இந்திய கேப்டன் விராட் கோலி, ராயுடு-விஜய் சங்கர் பிரச்சினையில் பதில் அளித்துள்ளார்.

 

விஜய் சங்கரை அணித்தேர்வுக்குழு தலைவர் பிரசாத் ‘3டி பிளேயர்’ அதாவது முப்பரிமாண ஆல்ரவுண்டர் என்று வர்ணித்தார், இதற்கு பதிலடியாக அம்பதி ராயுடு ‘நான் உலகக்கோப்பையை பார்க்க இப்போதுதான் 3டி கண்ணாடிகல் ஆர்டர் செய்தேன்’ என்று தன் ஆதங்கத்தை ஒரு சினிகல் கேலியுடன் பதிவு செய்தார்.

 

அதன் விளைவுகளிலிருந்தும் தப்பிவிட்டார் அம்பதி ராயுடு. ஆனால் விராட் கோலி இவற்றை சாதா‘ரண’மாக எடுத்துக் கொள்ள மாட்டார்.

 

அவர் அணித்தேர்வு பற்றி அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:

 

நாங்கள் நிறைய அணிச்சேர்க்கைகளை முயற்சி செய்தோம். சிலபல வீரர்களைச் சோதித்தோம். ஆனால் விஜய் சங்கர் வந்தவுடன் முப்பரிமாணம், அதாவது 3-டி ஆகிவிட்டது. ஆம் அவர் பவுல் செய்வார், பேட் செய்வார், நல்ல பீல்டர்.

 

அவர் முறையான பேட்ஸ்மென். இது எங்களுக்கு ஒரு தெரிவை வழங்கிற்று. மற்ற அணிகள் தங்களிடம் கொண்டுள்ள பேலன்ஸை நாம் ஏன் தேடக்கூடாது, அடையக்கூடாது? அந்தப் பார்வையில்தான் நாங்கள் விஜய் சங்கர் தேர்வை ஏற்றுக் கொண்டோம்.

 

ஆனால் யார் எந்த டவுனில் இறங்குவார்கள் என்பதெல்லாம் பிற்பாடுதான் தீர்மானிக்கப்படும்.

 

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close