[X] Close
 

ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்


rahane-fined-slow-over-rate

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 14 May, 2018 13:06 pm
  • அ+ அ-

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்படாமல் தாமதமான காரணத்தால் அந்த அணியின் தலைவர் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "வான்கடே மைதனாத்தில் மும்பை இந்தியஸுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில், தாமதமாக பந்து வீசிய காரணத்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணித் தலைவர் அஜிங்கியா ரஹானேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் ராஜஸ்தான் அணி முதல் முறையாக செய்யும் தவறு இது என்பதால் திரு. ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் 94 ரன்கள் அடித்து வெற்றிக்குக் காரணமாய் இருந்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close