[X] Close

சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்ததால் தோல்வி: சுரேஷ் ரெய்னா


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:25 am
  • அ+ அ-

சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் (பொறுப்பு) சுரேஷ் ரெய்னா கூறினார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 16.5 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி கண்டது. இந்த ஆட்டம் ஹைதராபாதில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் (பொறுப்பு) சுரேஷ் ரெய்னா கூறும்போது, “ஹைதராபாத் அணியினர் சிறப்பாக விளையாடினர். இந்தத் தோல்வி எங்களுக்கு ஒரு எழுப்புதல் அழைப்பு போல அமைந்துவிட்டது. அடுத்த ஆட்டத்தில் தோனி விளையாடுவார். அவர் முதுகுப் பிடிப்பு பிரச்சினை தற்போது சரியாகியுள்ளது.

எதிர்பார்த்த அளவுக்கு எங்களால் ரன்களைக் குவிக்க முடியவில்லை. மேலும் சீரான இடைவெளியில் விக்கெட்களைப் பறிகொடுத்தோம். இதுவே எங்கள் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது. மொத்தத்தில் சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. கிட்டத்தட்ட 30 ரன்களுக்கும் குறைவாக நாங்கள் ஸ்கோர் செய்தோம்” என்றார்ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட டேவிட் வார்னர் கூறும்போது, “எங்களுக்கு ஆதரவு தந்த ஹைதராபாத் மக்களுக்கு நன்றி. இங்கு சென்னை அணிக்கும்ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர்.

இருந்தபோதும் எங்கள் வீரர்களுக்கு நல்ல உற்சாகத்தை ஹைதராபாத் ரசிகர்கள் தந்தனர்.நானும், பேர்ஸ்டோவும் இணைந்து சிறப்பாக விளையாடினோம்.

எனக்கு நல்ல மனைவி, அருமையான 2 குழந்தைகள் உள்ளனர். மற்றுமொரு குழந்தை விரைவில் பிறக்கவுள்ளது. இதை விட உலகில் வேறு என்ன வேண்டும். உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இந்தியாவில் விளையாடும்போது அதைவிட சிறப்பான உற்சாகத்தை ரசிகர்களிடையே பார்க்கிறேன்” என்றார்.

கேப்டன் கேன் வில்லியம்ஸன் கூறும்போது, “நாங்கள் பீல்டிங், பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாகச் செய்தோம். சிஎஸ்கே அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் 9 ஓவர்களுக்குப் பிறகு ஆட்டம் எங்கள் கையில் வந்துவிட்டது. எங்களது சேஸிங் அருமையாக இருந்தது ரஷித், வார்னர், பேர்ஸ்டோ அனைவருக்கும் எனது பாராட்டுகள்” என்றார். - பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close