[X] Close

மும்பை இந்தியன்ஸை சமாளிக்குமா டெல்லி?


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 10:18 am
  • அ+ அ-

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதஉள்ளன.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுவரை இந்த இரு அணிகளும் 8 போட்டிகளில் விளையாடி தலா 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளன. புள்ளிகள் பட்டியலில் டெல்லி 2-வது இடத்திலும், மும்பை 3-வது இடத்திலும் உள்ளது. தொடக்கத்தில் மந்தமாக ஆடிய டெல்லி அணி அதன் பிறகு சுதாரித்து விளையாடி எதிரணிகளை மிரட்டி வருகிறது.

டெல்லி அணிக்கு பேட்டிங்கில் பிருத்வி ஷா. ஷிகர் தவண், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், காலின் முன்ரோ, கிறிஸ் மோரிஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

அதைப் போலவே பவுலிங்கில் ரபாடா, கீமோ பால், இஷாந்த் சர்மா, மோரிஸ், லாமிச்சன், அக்சர் பட்டேல் ஆகியோர் எதிரணி வீரர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

ரபாடா, மோரிஸ் ஆகியோர் ஹைதராபாத் அணிக்கெதிராக நடைபெற்ற கடந்த போட்டியில் மொத்தம் 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். மீண்டும் அதுபோன்ற பந்துவீச்சை 2 வீரர்களிடமிருந்தும் எதிர்பார்க்கலாம்.

அதேநேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லியைச் சமாளிக்கும் விதத்தில் வீரர்களைக் கொண்டுள்ளது. ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, இஷன் கிஷண், குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், கெய்ரன் பொலார்டு, கிருணால் பாண்டியா ஆகியோர் சிறப்பாக அணியின் தூண்களாக உள்ளனர்.

பெங்களூரு அணிக்கெதிராக நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் கடைசி நேரத்தில் 16 பந்துகளில் 37 ரன்களை விளாசி மிரட்டினார் ஹர்திக் பாண்டியா. கடைசி ஓவர்களில் சிறப்பாக விளையாடும் பாண்டியாவிடமிருந்து மற்றுமொரு இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம்.

அதேபோல பவுலிங்கில் பும்ரா, லசித் மலிங்கா, ஹர்திக் பாண்டியா, கிருணால் பாண்டியா, ராகுல் ஷகார், பெஹ்ரன்டார்ப் ஆகியோர் எதிரணி வீரர்களை மிரட்டக் காத்திருக்கின்றனர். இரு அணிகளிடையிலான இந்தஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close