[X] Close

பஞ்சாப் பந்துவீச்சாளர்களுக்கு கேப்டன் அஸ்வின் புகழாரம்


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 10:09 am
  • அ+ அ-

ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய பந்துவீச்சாளர்களுக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு தெரிவித்தார்.

இந்த ஆட்டம் நேற்றுமுன்தினம் இரவு மொஹாலியிலுள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி கண்டது.

17 ரன்களைக் குவித்ததோடு மட்டுமல்லாமல், 2 விக்கெட்களையும் வீழ்த்திய பஞ்சாப் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றிக்குப் பிறகு ஆர்.அஸ்வின் கூறியதாவது: போட்டியின் தொடக்கத்தில் சிறப்பாக வெற்றியைக் குவித்த எங்கள்அணி கடந்த சில ஆட்டங்களில் தடுமாறியது. ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றோம். தற்போது புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம்.

10 புள்ளிகள் பெறுவது மிக முக்கியமான ஒன்று. இந்த மைதானத்தில் 170 ரன்களுக்கு ராஜஸ்தானைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விஷயம். 2-வதாக பேட் செய்யும் அணிக்கு இந்த ஆடுகளம் எளிதாகஇருக்கும். ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர். அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜஸ்தான் கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறும்போது, “எங்களது பேட்டிங் இந்தப் போட்டியில் தோல்வி கண்டுவிட்டது. 183 ரன்கள் என்ற இலக்கு இந்த ஆடுகளத்தில் எளிதாகத் துரத்தக்கூடிய இலக்குதான். நாங்கள் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினோம். ஆனால் பின்வரிசை பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போய்விட்டது ” என்றார். - பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close