[X] Close

கே.எல்.ராகுல் புதிய மைல்கல்: சங்கக்கராவை பின்னுக்கு தள்ளினார்


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 11:54 am
  • அ+ அ-

மொஹாலியில் நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வீரர் கே.எல்.ராகுல் 52 ரன்கள் சேர்த்தபோது புதிய சாதனையை எட்டினார்.

மொஹாலியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிதத்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி.

இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் அடித்த அரைசதம் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றி, அணியை புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்துக்கு கிங்ஸ்லெவன் அணி முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் கே.எல். ராகுல் 47 பந்துகளுக்கு 52 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் இணைந்தபின் அந்த அணிக்காக ஆயிரம் ரன்களை சேர்த்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார். கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் ராகுல் சேர்ந்தபின் 23 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை ராகுல் எட்டியுள்ளார்.

இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமாரா சங்கக்கரா 37 போட்டிகளில் 1009 ரன்கள் சேர்த்திருந்தார். ஆனால், ராகுல் 23 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். இதில் ஒரு சதம், 10 அரைசதங்கள் அடங்கும். கிங்ஸ்லெவன் அணிக்காக அதிக ரன்கள் சேர்த்தவர்களில் ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் 69 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரத்து 477 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close