[X] Close

அம்பதி ராயுடுவுக்கு பதிலாக விஜய் சங்கரை தேர்வு செய்திருக்க கூடாது: முரளி கார்த்திக் கருத்து


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 12:52 pm
  • அ+ அ-

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 4-வது இடத்துக்கான தேர்வில் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக விஜய் சங்கரை தேர்வு செய்திருக்ககூடாது என்று முன்னாள் வீரர் முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வரும் மே 30-ம் தேதி உலகக்கோப்பை போட்டித் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இதில் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இருவரில் யாரைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 இறுதியில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றார். அதேபோல, நடுவரிசைக்கு தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என 3 வகையான பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்பதால், விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார் என்று தேர்வுக் குழுத்தலைவர் பிரசாத் தெரிவித்தார்.

அதேசமயம், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இந்திய அணியில் 4-வது இடத்துக்கு சரியான வீரர் அம்பதி ராயுடுதான் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்து வந்தார். இதனால், உலகக்கோப்பைக்கான அணியில் அம்பதி ராயுடுவுக்கு இடம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது ஆனால், விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இளம் வீரர் விஜய் சங்கரும் பகுதிநேரப் பந்துவீச்சாளராகவும், நல்ல பேட்ஸ்மேனாகவும் செயல்படக்கூடியவர். களத்தில் நல்ல பீல்டராகவும் வலம்வரகிறார். ஆஸ்திரேலியத் தொடரிலும், நியூசிலாந்து தொடரிலும் விஜய் சிங்கரின் பேட்டிங் பளிச்சிட்டது.

murali.jpg 

இந்நிலையில், தமிழக வீரரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான முரளி கார்த்திக், கிரிக்இன்போ தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக விஜய்சங்கர் தேர்வு செய்திருக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார்.  அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேசமயம், அம்பதி ராயுடு அணியில் தேர்வு செய்யாமல் அவருக்காக வருத்தப்படுகிறேன்.

அணியில் 4-வது வரிசை என்பது மிகவும் முக்கியமான இடம். முக்கியமான கட்டத்தில் அணிக்கு ரன்களை சேர்த்து தரக்கூடிய இடம். 4-ம் வரிசையில் இறங்கும் வீரர் சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் எதிர்கொண்டு விளையாடும் அனுபவம் இருக்க வேண்டும். அந்த வகையில் அம்பதி ராயுடு, வேகப்பந்துவீச்சையும், சுழற்பந்துவீ்ச்சையும் நன்றாக எதிர்கொண்டு விளையாடக்கூடியவர். நல்ல அனுபவம் கொண்டவர் ராயுடு.  

சராசரியைப் பொருத்தவரை விஜய் சங்கரைக் காட்டிலும் அம்பதி ராயுடு நல்ல சராசரி வைத்துள்ளார். நான் நடுநிலையோடு ஒரு கிரிக்கெட் வீரராக கருத்தைச்  சொல்வதென்றால், நடுவரிசையில் விஜய் சங்கரைக் காட்டிலும் ராயுடு நன்றாக விளையாடக் கூடியவர். ராயுடுவின் கடந்த கால இன்னிங்ஸ்கள், சராசரிகளை பார்த்துத்தான் இதைக் கூறுகிறேன்.

ஆதலால், என்னைப் பொருத்தவரை விஜய் சங்கர் தேர்வு செய்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும், 4-வது இடத்துக்கு ராயுடுவுக்கு பதிலாக விஜய் சங்கரைத் தேர்வு செய்திருக்கக்கூடாது. இவ்வாறு முரளி கார்த்திக் தெரிவித்தார்.

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து விஜய் சங்கர் 9 போட்டிகளில் 165 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரியாக 33 ரன்கள் வைத்துள்ளார். அதேசமயம், அம்பதி ராயுடு 21 போட்டிகளில் விளையாடி 539 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம், 4 அரைசதங்கள் அடங்கும். சராசரியையும் 42 ரன்கள் வைத்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close