[X] Close

கோலி நான்காவதாக களமிறங்கக் கூடாது - உலகக் கோப்பை அணி தேர்வு குறித்து ஹர்ஷா போக்ளே கருத்து


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 18:53 pm
  • அ+ அ-

உலகக் கோப்பை போட்டிகளில் கேப்டன் விராட் கோலி நான்காவதாகக் களமிறங்கினால் அது தனக்கு ஏமாற்றமாக இருக்கும் என்றும் கிரிக்கெட் விமர்சகரும், வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே கருத்து தெரிவித்துள்ளார்.

2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி (கேப்டன்) ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ஹர்திக்  பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாதி ராயுடு, ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படாதது ஒரு சிலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த அணித் தேர்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சகரும், வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே கூறியிருப்பதாவது:

"தினேஷ் கார்த்திக்குக்கு உலகக் கோப்பை அணியில் இடமுள்ளது என்ற பேச்சுகளே நிலவி வந்தன. ஆனால் முறையாக அறிவிக்கப்படும்வரை எதுவும் நிச்சயமில்லை. எப்படி இருந்திருந்தாலும் ஒரு கீப்பருக்கு இது மனவருத்தமே. மற்றபடி மீதமுள்ள அணித் தேர்வு எதிர்பார்த்த ஒன்றே.

ஆனால அம்பாதி ராயுடு மனமுடைந்து போயிருப்பார். அணியில் அவரது இடம் உறுதி போலத் தெரிந்தது. நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை விளையாடுவதையும் இதற்காக விட்டுவிட்டிருந்தார். ஆனால் ஃபார்ம் என்பது ஒரு குரூரமான துணையைப் போல. அவர் அதிகமாக உழைக்க உழைக்க அவர் இன்னும் தத்தளித்தைப் போல இருந்தது. அவருக்கு எனது ஆறுதல்கள்.

இந்த அணித்தேர்வைப் பார்க்கும்போது நான்காவதாக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது. இப்போதைக்கு ராகுல் மூன்றாவதாகக் களமிறங்க விஜய் ஷங்கர் அல்லது விராட் கோலி ஆகியோர் தேர்வில் இருக்கின்றனர். உள்ளூர் கிரிக்கெட்டைப் பார்ப்பவர்கள் விஜய் ஷங்கருக்கு அதிக மதிப்பீடு தருகின்றனர். அவர் இடம் பிடித்ததில் மகிழ்ச்சி. ஆனால், அவரது பொறுமை உலகக் கோப்பை போட்டிகளில் சோதிக்கப்படும்.

கோலியை நான்காவதாக களமிறக்கினால் என்னளவில் அது ஏமாற்றமே. ஏனென்றால் அவரது நிலையில் அவர் மிகச்சிறந்த வீரர். சரியாக ஆடாதவர்களுக்காக அவரைப் போன்ற ஆட்ட நாயகர்கள் ஆடும் நிலையை மாற்றக் கூடாது.

பந்துவீச்சாளர்கள் தேர்வுத் திறனின் அடிப்படையில் தானாகவே முடிவாகிவிட்டது. சில போட்டிகளில் இந்தியா 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தும் விளையாட வேண்டியிருக்கலாம். ஆனால் பெரும்பாலும், 2 வேகப்பந்து வீச்சு, 2 சுழற்பந்து வீச்சு என அணி இருக்கும் என நினைக்கிறேன். இதில் கூடவே பாண்டியா இருப்பதும் சரியே. விஜய் ஷங்கர், ஜாதவ் இருவரும் பேட்ஸ்மேன்களாக அணியில் சிறந்து, பந்துவீச்சு ஒரு கூடுதல் பலனாக மட்டுமே இருக்க வேண்டும்

டெஸ்ட் போட்டிகளில் கீப்பராக இருக்கும் ரிஷப் பந்துக்கு இந்தத் தேர்வு சற்று குழப்பத்தைத் தரலாம். ஆனால் அவர் தேர்வு செய்யாமல் விட்டது அவரது விக்கெட் கீப்பிங் திறனால். இதனால், தினேஷ் கார்த்திக்குக்கு ஆச்சரியகரமான பயணம் அமைந்துள்ளது. முற்றிலும் விலகியிருந்த நிலையிலிருந்து தற்போது உலகக் கோப்பை அணியில் தேர்வு. நம்பிக்கைக் கதை இது".

இவ்வாறு ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.

அணித்தேர்வு இப்போது அறிவிக்கப்பட்டாலும் மே 23-ஆம் தேதி வரை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனுமதி பெறாமலேயே இதில் மாற்றங்கள் செய்ய அனுமதி உண்டு.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close