[X] Close

பெருமை தந்த தருணங்கள் 2013


2013

  • Posted: 29 Dec, 2013 03:33 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி மும்பையில் இன்று தேர்வு செய்யப்பட உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் முடிவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தியிருந்தார். உலகக் கோப்பை தொடருக்கான அணியில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே நிறைவு செய்ய வேண்டியது உள்ளது என்று விராட் கோலி குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூற்றுப்படி ஒரே ஒரு இடமேஇருப்பினும் இந்த இடத்துக்கான தேர்வு 3-வது விதமான அம்சங்களை எதிர்நோக்கியதாக உள்ளதாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. அது 2-வது விக்கெட் கீப்பர், 4-வதுஇடத்தில் களமிறங்கும் வீரர், 4-வதுபிரதான வேகப்பந்து வீச்சாளர் ஆகியோருக்கான தேடுதலாக இருக்கக்கூடும்.

2-வது விக்கெட் கீப்பராக இடம் பெறுவதில் ரிஷப் பந்த்துக்கும், மூத்த வீரரான தினேஷ் கார்த்திக்குக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஐபிஎல் தொடரின் பார்ம் உலகக் கோப்பைதொடருக்கான அணித் தேர்வுக்கு கருத்தில் கொள்ளப்படாது என விராட் கோலிஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனினும்ரிஷப் பந்த், ஐபிஎல் தொடரில் 222 ரன்கள் சேர்த்து சிறந்த பார்மில் உள்ளார்.

அதேவேளையில் தினேஷ் கார்த்திக் வெறும் 111 ரன்களே சேர்த்துள்ளார். இவர்களில் ரிஷப் பந்த்துக்கு சாதகமான விஷயம் என்னவெனில் பேட்டிங் வரிசையில் 1 முதல் 7 இடங்களுக்குள் எந்த இடத்திலும் களமிறங்கும் தன்மை கொண்டவர். விக்கெட் கீப்பிங்கின் போது சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தனது உயர்மட்ட திறமைகளை வெளிப்படுத்தத் தவறுவதே ரிஷப் பந்த்துக்கு சற்று பலவீனமாக உள்ளது. ஆனால் அதேவேளையில் கடந்த 12 மாதங்களில் தினேஷ் கார்த்திக்விக்கெட் கீப்பிங் பணியை கையாளவில்லை. தோனி காயம் அடைந்தால் மட்டுமே 2-வது விக்கெட் கீப்பரின் பணி தேவையாக இருக்கும். இதனால் சிறப்பு பேட்ஸ்மேன் என்ற அடிப்படையிலேயே ரிஷப் பந்த் அல்லது தினேஷ் கார்த்திக் தேர்வு அமையக்கூடும்.

3-வது தொடக்க வீரராக கருதப்படும் கே.எல்.ராகுல், ஐபிஎல் தொடரில் 335 ரன்கள் சேர்த்து கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் அவர், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார். இதனால் கே.எல்.ராகுலை 2-வது விக்கெட் கீப்பராக பயன்படுத்திக் கொள்வது குறித்தும் தேர்வுக்குழுவினர் ஆலோசிக்கக்கூடும்.

கே.எல்.ராகுல் 2-வது விக்கெட் கீப்பராக கருதப்பட்டால் 4-வது வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேனாக அம்பதி ராயுடு இடம்பெறுவதில் எந்தவித சிக்கலும் இருக்காது. கடந்த நவம்பர் மாதத்துக்கு பிறகு கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், 4-வது பேட்ஸ்மேனுக்கான இடத்தை அம்பதி ராயுடு நிறைவு செய்யக்கூடும் என கருதினர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் அம்பதி ராயுடு சிறப்பாக செயல்படத் தவறினார்.

இதற்கிடையே இந்தக் காலக்கட்டத் தில் அணி நிர்வாகத்தின் நம்பிக் கையை தமிழகத்தைச் சேர்ந்த மித வேகப் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் பெற்றார். பேட்டிங் வரிசையில் 4-வது இடத்தில் விஜய் சங்கரை இடம் பெறச் செய்ய வேண்டும் என அணி நிர்வாகம் முடிவு செய்தால் அம்பதி ராயுடு அணிக்குள் நுழைவது சிக்கல்தான்.

கடைசியாக 4-வது பிரதான வேகப் பந்து வீச்சாளர் தேர்வு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கான தேடுதலில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது, நவ்தீப் ஷைனி, தீபக் ஷகார் இருக்கக்கூடும்.

உத்தேச அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த் அல்லது தினேஷ் கார்த்திக் அல்லது அம்பதி ராயுடு அல்லது உமேஷ் யாதவ்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close