[X] Close

இந்தி சினிமா 2013 : முடிசூடா இளவரசியான தீபிகா படுகோன்


2013

  • Posted: 31 Dec, 2013 16:59 pm
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு, நடை பெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தனர்.

7 ஆட்டங்களில் 270 ரன்கள் சேர்த்துள்ள விராட் கோலி, 232 ரன்கள் சேர்த்துள்ள டி வில்லியர்ஸ் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இவர்கள் இருவரையும் தவிர்த்து மற்ற வீரர்களில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பார்த்தீவ் படேல் மட்டுமே சீராக ரன்கள் சேர்த்து வருகிறார். 7 ஆட்டங்களில் 191 ரன்கள் சேர்த்துள்ள அவரிடம் இருந்து மீண்டும் ஒரு அர்ப்பணிப்புடன் கூடிய ஆட்டம் வெளியாகலாம். பந்து வீச்சை பொறுத்தவரையில் யுவேந்திர சாஹல் மட்டுமே பலம் சேர்க்கிறார். 11 விக்கெட்கள் வீழ்த்தி, அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள யுவேந்திர சாஹல் மும்பை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு இன்றைய ஆட்டத்தில் அழுத்தம் தரக்கூடும். வேகப்பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் டேல் ஸ்டையின் களமிறக்கப்படலாம்.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 7 ஆட்டங்களில் 4 வெற்றி, 3 தோல்விகளை பெற்றுள்ளது. கடைசியாக ராஜஸ்தான் அணிக்குஎதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது மும்பை அணி. கடந்த ஆட்டத்தில் பீல்டிங்கின் போது அல்ஸாரி ஜோசப், தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதனால் அவர், இன்று களமிறங்குவது சந்தேகம்தான். அநேகமாக அவருக்கு பதிலாக மலிங்கா இடம் பெறக்கூடும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close