[X] Close
 

தோனியிடம் கேப்டனுக்கான அடையாளங்களை கண்டுப்பிடித்தது எப்படி?- சச்சின்


how-sachin-tendulkar-identified-the-captain-in-ms-dhoni

  • இந்து குணசேகர்
  • Posted: 11 May, 2018 15:48 pm
  • அ+ அ-

தோனியை இந்திய அணியின் கேப்டனாக நியமித்ததில் சச்சின் டெண்டுல்கர் முக்கிய நபராக இருந்திருக்கிறார் என்று கூறப்படுவது உண்டு. அதனை சச்சின் தற்போது உறுதி செய்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பாவான்களான ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் ஓய்வு பெறும் காலக்கட்டத்தில் இந்திய அணியை வழி நடத்திச் செல்வது யார்? என்ற கேள்வி எழுந்தபோது கேப்டனான மகேந்திர சிங் தோனி தனது 26 வயதில் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திய தோனி உலக கோப்பை, சாம்பியன் டிராபி என கோப்பைகளை அள்ளி அணியை சிறப்பாக வழி நடத்தி இந்தியாவின் வெற்றிக்கரமான கேப்டன் என்ற பெருமையும் தோனிக்கு கிடைத்தது. 

பத்து ஆண்டுகளை கடந்து பல அனுபவமான வீரர்கள் இருந்து தோனி எவ்வாறு கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் கூட தோனி தான் கேப்டனாக தேந்தெடுக்கப்பட்டதில் சச்சினின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதனை சச்சினும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சச்சின் தோனியிடம் தலைவனுக்குரிய குணநலன்கள் இருந்தததை அடையாளம் கண்ட அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதில், "களத்தில் பீல்டிங் செய்யும்போதெல்லாம் நான் தோனியிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டு இருப்பேன். எனது கருத்துகளை அவரிடம் கூறுவேன். அதனை அவர் எடுத்துக் கொள்வார். இந்த உரையாடல்களில் தோனியிடம் தலைவனுக்குரிய அடையாளங்களை கண்டேன்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close