[X] Close

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்... தொடர்ந்து தவறு செய்தால் தடை


12

  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 11:14 am
  • அ+ அ-

-Muthukumar R_50162

தொடர் தோல்விகளுக்குப் பிறகு நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோலியின் ஆர்சிபி அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.  ஆனால் கோலிக்கு ஆட்ட முடிவில் இதன் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதன் மூலம் இந்தத் தொடரில் ரோஹித் சர்மா, அஜிங்கிய ரஹானே, தோனி, விராட் கோலி ஆகிய கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் ரோஹித் சர்மா, ரஹானே, கோலி ஆகியோருக்கு தேவையில்லாமல் ஆட்டத்தை மந்தமாக்கி ஓவர்களை குறித்த நேரத்தில் வீசி முடிக்காததற்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, தோனிக்கு அத்துமீறிய குற்றச்சாட்டுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விராட் கோலி இந்தத் தொடரிலிருந்து ஒரு போட்டியில் தடை செய்யப்படும் ஆபத்தும் ஆர்சிபிக்கு உள்ளது.

2வது முறையாக ஓவர்களை குறித்த நேரத்தில் வீசி முடிக்காவிட்டால் கேப்டனுக்கு ரூ.24 லட்சம் அபராதம், அணியிலிருக்கும் மற்ற வீரர்களுக்கு ஆட்டத் தொகையில் 25% அபராதம் விதிக்கப்படும்.

3வது முறை குறித்த நேரத்தில் ஓவர்களை முடிக்காமல் தாமதித்தால் ரூ.30 லட்சம் அபராதத்துடன் ஒரு போட்டி தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close