[X] Close

கால் இறுதியில் சிந்து, சாய்னா


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 09:01 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், சமீர் வர்மா ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினர்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில், உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 22-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் மியாவை எதிர்த்து விளையாடினார்.

39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-13, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் சிந்து, 18-ம் நிலை வீராங்கனையான சீனாவின் காய் யன்யனுடன் மோதுகிறார்.

உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள சாய்னா நெவால் தனது 2-வது சுற்றில், தாய்லாந்தின் சோ சு வாங்கை எதிர்கொண்டார். இதில் சாய்னா நெவால் 21-16, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்தார். கால் இறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோஸாமி ஒகுஹராவுடன் மோத உள்ளார் சாய்னா நெவால்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் சாய்னாவின் கணவரும், 41-ம் நிலை வீரருமான இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் 9-21, 21-15, 16-21 என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீரரான சீனாவின் சென் லாங்கிடம் தோல்வியடைந்தார். அதேவேளையில் 16-ம் நிலையில் உள்ள மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மா 21-15, 21-18 என்ற நேர் செட்டில் சீனாவின் லு குவாங்ஸுவை வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தார்.

6-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-12, 23-21 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியனை வீழ்த்தினார். கால் இறுதியில் முதல் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மோமோடாவுடன் மோதுகிறார் ஸ்ரீகாந்த். கென்டோ தனது 2-வது சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோயை 21-11, 21-11 என்ற நேர் செட்டில் வீழ்த்தியிருந்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close