[X] Close

ஐபிஎல் போட்டியிலிருந்து பாதியிலேயே விடைபெற்ற மார்க் வுட்


mark-wood-leaves-ipl-early-to-prepare-for-england-test-matches

  • இந்து குணசேகர்
  • Posted: 09 May, 2018 14:26 pm
  • அ+ அ-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது இடம் கிடைக்காததால் இங்கிலாந்து வீரர் மார்க் வுட் நாடு திரும்புவதாக அறிவித்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடப்பெற்றுள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் (28) இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில்  மார்க் வுட், " இது நானே எடுத்த முடிவுதான். சென்னை அணியில் தற்போது இடம் கிடைக்காததால் இங்கிலாந்தில் அடுத்து நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்காக தயாராக நாடு திரும்ப இருக்கிறேன். என்னை அவர்களது குடும்பத்தில் வரவேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர், வீரர்கள், ஆதாரவாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தோனி எனக்கு தொப்பியை அணிவித்தது பெருமைக்குரிய தருணம். மீண்டும் சிஎஸ்கே தொப்பியை அணிவேன் என்று நம்புகிறேன். வீட்டிலிருந்தே சிஎஸ்கே அணியின் ஆட்டங்களை பார்த்து ஆதரவளிப்பேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

சென்னை அணியால் 1. 50  வாங்கப்பட்ட மார்க் வுட் சென்னை அணிக்காக ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார், அதில் 4 ஓவர்கள் பந்து வீசி 49 ரன்களை வாரி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close