[X] Close

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து உலகக்கோப்பை அணி அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 03 Apr, 2019 15:06 pm
  • அ+ அ-

இங்கிலாந்தில் நடைபெறும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான 15 வீரர்கள் கொண்ட முழுமையான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இஷ் சோதி, டாம் பிளண்டெல் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் செய்ஃபர்ட் காயமடைந்துள்ளதால் டாம் பிளண்டெல் என்ற பதிலி விக்கெட் கீப்பர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

 

லெக் ஸ்பின்னர் டாட் ஆஸ்ட்ல்தான் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷ் சோதி இடம்பெற்றுள்ளார்.

 

ஹென்றி நிகோல்ஸ், மார்டின் கப்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கும் நிலையில் கொலின் மன்ரோவும் தன் இடத்தைத் தக்கவைத்துள்ளார்.  ஜிம்மி நீஷம், கொலின் டி கிராண்ட் ஹோம் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னொரு ஸ்பின் ஆல்ரவுண்டராக மிட்செல் சாண்ட்னர் இடம்பெற்றுள்ளார்.

 

 

நியூஸிலாந்து உலகக்கோப்பை அணி விவரம்:

 

கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், ராஸ் டெய்லர், டாம் லேதம், கொலின் மன்ரோ, டாம் பிளண்டல், ஜிம்மி நீஷம், கொலின் டி கிராண்ட் ஹோம்,  மிட்செல் சாண்ட்னர்,  இஷ் சோதி, டிம் சவுதி, மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close