[X] Close

ரபாடாவின் பந்துவீச்சை சமாளிக்குமா பஞ்சாப்?- டெல்லியுடன் இன்று மோதல்


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 07:21 am
  • அ+ அ-

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி பஞ்சாபின் சொந்த மைதானமான மொஹாலியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுவரை டெல்லி, தான் விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி, ஒன்றில் தோல்விஎன்ற நிலையில் களமிறங்குகிறது. அதேபோல பஞ்சாப் அணியும் 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி, ஒரு போட்டியில் தோல்வி கண்ட நிலையில் களம் புகுகிறது.

நேற்று முன்தினம் கொல்கத்தாவுடனான போட்டியில் டெல்லி அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் போட்டி டையில் முடிந்ததால் வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய டெல்லி 10 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா 7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

டெல்லி வீரர் காகிசோ ரபாடாவின் அபாரமான பந்துவீச்சால், டெல்லி அணி வெற்றி கண்டது. ரபாடா வீசிய யார்க்கர் பந்துகளால் கொல்கத்தா வீரர்கள் நிலைகுலைந்தனர். போட்டியில் வெற்றி பெறுவதற்கு ரபாடாவின் பந்துவீச்சுதான் காரணம் என்று விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

டெல்லி அணி வீரர் பிருத்வி ஷா, நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அபாரமாக விளையாடி ரன்களைக் குவித்தார். 55 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்துசதமடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

இன்றைய ஆட்டத்திலும் பிருத்வி ஷாசிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அவருக்கு உறுதுணையாக கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், ஷிகர் தவண், அதிரடிவிக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், காலின் இங்ரம்,ஹனுமா விஹாரி ஆகியோர் உள்ளனர்.

அதே நேரத்தில், பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசையும் பலமாகவே உள்ளது கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், சர்பிராஸ் கான், மன்தீப் சிங் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பந்துவீச்சில் கேப்டன் ஆர்.அஸ்வின், எம்.அஸ்வின், மொகமது ஷமி, ஆன்ட்ரூ டை, ஹர்டஸ் வில்ஜோயன் ஆகியோர் எதிரணியை மிரட்டி வருகின்றனர்.

அணி விவரம்:கிங்ஸ் லெவன் பஞ்சாப்: ரவிச்சந்திரன் அஸ்வின், கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல், மொகமது ஷமி, மயங்க் அகர்வால், கருண் நாயர், முஜிப் உர் ரஹ்மான், டேவிட் மில்லர், சேம் கரன், வருண் சக்கரவர்த்தி, நிக்கோலஸ் பூரன், மோய்சஸ் ஹென்றிக்ஸ், ஹர்டஸ் வில்ஜோயன், தர்ஷன் நல்கண்டே, சர்பிராஸ் கான், அர்ஷ்தீப் சிங், அக்னிவேஷ் அயாச்சி, ஹர்பிரீத் பிரார், முருகன் அஸ்வின், ஆன்ட்ரூ டை, அங்கித் ராஜ்புத், மன்தீப் சிங், சிம்ரன் சிங்.

டெல்லி கேபிடல்ஸ்: ஸ்ரேயஸ் ஐயர், காலின் முன்ரோ, பிருத்வி ஷா, ஷிகர் தவண், ஹனுமா விஹாரி, காலின் இங்ரம், மஞ்சோத் கல்ரா, கிறிஸ் மோரிஸ், ஷெர்பான் ருதர்போர்ட், கீமோ பால், அக்சர் பட்டேல், ஜலஜ் சக்சேனா, ராகுல் டெவாட்டியா, ரிஷப் பந்த், அங்குஷ் பெயின்ஸ், லாமிச்சன், ஆவேஷ் கான், ஹர்ஷல் ப்டடேல், டிரென்ட் போல்ட், அமித் மிஸ்ரா, காகிசோ ரபாடா, இஷாந்த் சர்மா, நாது சிங், பண்டாரு ஐயப்பா.

ரபாடாவுக்கு கங்குலி பாராட்டு

இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது: கொல்கத்தாவுடனான போட்டியின்போது சூப்பர் ஓவரை மிகவும் சிறப்பாக வீசினார் ரபாடா.

அவர் வீசிய யார்க்கர் பந்தில், கொல்கத்தா வீரர் ஆந்த்ரே ரஸல் நிலைகுலைந்து ஆட்டமிழந்தார். இந்த ஐபிஎல் போட்டியின் மிகச் சிறந்த பந்தாக அது அமைந்தது.

மிகச் சிறந்த பேட்ஸ்மேனான ஆந்த்ரே ரஸலுக்கு பந்துவீசுவது மிகவும் சிரமம்தான். சிறப்பான ஃபார்மில் உள்ள அவரை நிலைதடுமாறும் அளவுக்கு ரபாடா அருமையாக வீசினார். அவரது பந்துவீச்சு நம்பமுடியாத வகையில் இருந்தது. அணிக்கு வெற்றி தேவையான நேரத்தில் அதை பெற்றுத் தந்தார் ரபாடா. அதேபோல டெல்லி பேட்ஸ்மேன் பிருத்வி ஷா சிறப்பாக விளையாடி 99 ரன்கள் குவித்தார். ஆனால் சதமடிக்க முடியாமல் போனது வருத்தம்தான். ஆனால் வரும் போட்டிகளில் அவர் சதமடிப்பார்.

அதுமட்டுமல்லாமல் டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சதம் விளாசுவார். இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close