[X] Close

கள நிலவரம்: சிவகங்கை தொகுதி யாருக்கு?


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 09:32 am
  • அ+ அ-

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பின்ச்சின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. மொகமது ரிஸ்வான் 126 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷோயிப் மாலிக் 60, ஹாரிஸ் சோகைல் 34 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ரிச்சர்ட்சன், நேதன் கவுல்டர் நைல் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

285 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தனது 13 வது சதத்தை விளாசிய கேப்டன் ஆரோன் பின்ச் 143 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 153 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா 109 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் சேர்த்தார்.

முதல் விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா, ஆரோன் பின்ச் ஜோடி 36.4 ஓவர்களில் 209 ரன்கள் குவித்து மிரட்டியிருந்தது. இவர்களுடன் மேக்ஸ்வெல் 19, ஷான் மார்ஷ் 11 ரன்கள் சேர்த்தனர். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close