[X] Close

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு


160

  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 06:22 am
  • அ+ அ-

ஐபிஎல்லில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அவர்கள் எங்கிருந்து வாக்களிக்க விரும்பினாலும்  வாக்களிக்க அனுமதிக்க அளிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் மோடி மக்களிடையே தேர்தலில் வாக்களிப்பது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த,  பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் ட்விட்டரில் அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில் இன்று கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு மோடி  அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இதற்கு பதிலளித்த  அஸ்வின்,” சரியான தலைவரை தேந்தெடுப்பதற்கு நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாலும் வாக்களிக்க வேண்டும்”என்று பதிவிட்டார்.

இத்துடன் ஒரு கோரிக்கையையும் பிரதமர்  மோடியிடம் அஷ்வின் வைத்தார்.

அதில், “  ஐபிஎல்லில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அவர்கள் எங்கிருந்து வாக்களிக்க விரும்பினாலும்  வாக்களிக்க அனுமதிக்க அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

அஷ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close