[X] Close

தோல்வியில் இருந்து மீள்வது யார்?- ஹைதராபாத் - பஞ்சாப் இன்று மோதல்


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 09:10 am
  • அ+ அ-

உலகின் புகழ்பெற்ற கட்டிடங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து யார்டு கட்டிடத்தை கேரளாவைச் சேர்ந்த லுலு குழும தொழிலதிபர் யூசுப் அலி வாங்கி தங்கும் விடுதியாக மாற்றியுள்ளார். 1829-ல் கட்டப்பட்ட ஸ்கார்ட்லாந்து யார்டுகட்டிடம் லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறையால் 60 ஆண்டுகள், அதாவது 1890 வரை கைதிகளை சிறை வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தைத் தற்போது இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலி என்பவர் 110 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.1,000 கோடி)க்கு வாங்கியுள்ளார்.

லண்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் நிதித் திரட்டுவதற்காகச் சில சொத்துக்களை விற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த ஸ்காட்லாந்து யார்டு கட்டிடத்தை 2013-ல் கலியார்டு ஹோம்ஸ் நிறுவனத்துக்கு விற்றுள்ளது. 2015-ல் இக்கட்டிடத்தை யூசுப் அலி வாங்கியுள்ளார். பின்னர், இந்தச் சிறைச்சாலை கட்டிடத்தை 75 மில்லியன் பவுண்ட் செலவு செய்து தங்கும் விடுதியாக மாற்றியுள்ளார். டிரஃபால்கர் சதுக்கத்தின் அருகில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் 150 அறைகளைக் கொண்ட விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.

ஒரு இரவுக்கு இங்கு தங்குவதற்கு வாடிக்கையாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும், அதிகபட்சமாக 10,000 பவுண்டுகள் வரை கட்டணம் தர தயாராக இருக்கிறார்களாம். அங்கு, பழைய இராணுவ சீருடைகள், கைதிகளின் கலைப்படைப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை இங்குத் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு, லண்டனின் பிரபல கிரிமினல்களை நினைவுபடுத்துவதாக உள்ளன. பெரும்பாலான சிறைகள், சந்திப்பு அறைகளாகவும், தேநீர் விடுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. கூட்டங்கள், கொண்டாட்டங்கள் நடத்துவதற்கான அரங்குகளும் இதில் உள்ளன. கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த யூசுப் அலி காதர், அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லுலு குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டாலர். இவர் இந்தியாவின் 24-வது பணக்காரர் என்றும், உலக அளவில் 270-வது பணக்காரர் என்றும் போர்ப்ஸ் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close