[X] Close

விராட் கோலியின் தவறான டாஸ் முடிவு: வார்னர், பேர்ஸ்டோ காட்டடி சதம்: ஆர்சிபியை முடித்த சன்ரைசர்ஸ்


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 20:47 pm
  • அ+ அ-

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுவதாகக் கூறப்படும் நிலையில் தனது அரசியல் எதிரிகளை மீறி மகனை வெற்றி பெற வைக்க முடியுமா? என்று அவர் குழப்பத்தில் உள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார். இவர் தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார்.

தேனி தொகுதியில் இவர் போட்டியிட்டால் வீழ்த்துவதன் மூலம் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கையில் சரிவை ஏற்படுத்தலாம் என்று அவரது அரசியல் எதிரியும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளருமான தங்கதமிழ்ச்செல்வன் எதிர்பார்த்துள்ளார்.

எனவே மதுரையில் மகனை களம் இறக்கலாமா என ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை செய்தார். இதற்கு உள்ளூர் அதிமுகவினருக்கு விருப்பம் இல்லை. அதனால், தேனி தொகுதியில் மகனை களம் இறக்கும் முடிவில் ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார். இது குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:

மாநில அரசியல் மட்டுமின்றி டெல்லி அரசியலிலும் தடம் பதிக்க ஓ.பன்னீர் செல்வம் ஆசைப்படுகிறார். அதற்கு தனக்கு நம்பிக்கையான ஒருவரை டெல்லி அனுப்புவதற்குப் பதில் தன் மகனையே அனுப்பினால் என்ன என்பதால் மக்களவைத் தேர்தலில் நிறுத்த முடிவு செய்தார்.

தங்க தமிழ்ச்செல்வன் குடைச்சல் கொடுப்பதால் மகனை விருதுநகரில் நிறுத்த முதலில் முடிவு செய்தார். விருதுநகர் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுவதால் மதுரை யில் நிறுத்தலாம் என்று ஆலோசித்தார். அதற்கும் எதிர்ப்பு கிளம்பவே தற்போது தேனியிலே மகனை நிறுத் தலாம் என்று முடிவெ டுத்து ள்ளார்.

ஏற்கெனவே தந்தை துணை முதல்வர், அவரது தம்பி ராஜா ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர், மகனுக்கு எம்.பி. ‘சீட்’ என குடும்பத்தினருக்கே ஓ.பன்னீர்செல்வம் பதவிகளை கொடுப்பதாக கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறது. இதனால் மகனை வெற்றி பெற வைக்க முடியுமா? என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேனியில் மகனை நிறுத்தினால் அவரை தோற் கடிக்க தங்க தமிழ்ச்செல்வன் எதை செய்யவும் தயங்கமாட்டார். தேனி தொகுதியில் அமமு கவுக்கு ஓரளவு செல்வாக்கும் உள்ளது. டிடிவி.தின கரன், ஏற்கெனவே அங்கு போட்டி யிட்டவர் என் பதால் அவருக்கு கட்சித் தொண்டர் களிடமும், நிர்வாகிகளிடமும், மக்களி டமும் நல்ல அறிமுகம் உண்டு. அதனால், தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மகன் நின்றால் அவருக்கு எதிரான தேர்தல் வியூகத்துக்கும், பிரச்சாரத் துக்கும் டிடிவி.தினகரன், அதிக முக்கியத் துவம் கொடுப்பார். அரசியல் எதிரிகள், கட்சியினர் உள்குத்து ஆகியவற்றால் மகனை நிறுத்தாவிட்டால் அரசியல் எதிரிகளுக்கு பயந்து ஓ.பன்னீர் செல்வம் பின்வாங்குகிறார் என்ற அவப்பெயரும் ஏற்படும். அதனால், இரு தலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறார்.

ஆனால், மகனோ ‘சீட்’ கொடுங்கள், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், தேனி தொகுதியில் மதுரை புறநகருக்குட்பட்ட உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெறுகின்றன. அதனால், இந்த இரு தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்றுத்தருவது தன் பொறுப்பு என்று அமைச்சர் ஆர்.பி.உத யகுமார் உறுதியளித்துள்ளார். அதனால், ஓ.பன்னீர் செல் வம் தற்போது தெம்பாக இருக்கிறார் என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close