[X] Close

‘மிஷன் சக்தி’: பிரதமர் மோடியின் உரை தேர்தல் விதிமீறலா? - ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 21:26 pm
  • அ+ அ-

இந்த ஆஸ்திரேலியா தொடர்தான் உலகக்கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச தொடர் என்று கூறி இந்தத் தொடரில் சிலபல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உலகக்கோப்பை அணி தேர்வு செய்யப்படும் என்று கூறிவந்த நிலையில் திடீரென அந்தர் பல்ட்டி அடித்த  இந்திய பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் அபத்த நியாயப்பாட்டை வழங்குகிறார்.

நாளை (புதன் கிழமை, 13-3-19) கடைசி வாழ்வா சாவா ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில் சஞ்சய் பாங்கர் கூறியதாவது:

இந்தத் தொடரில் பயன்படுத்தப்பட்ட அணிச்சேர்க்கைதான் உலகக்கோப்பையிலும் பயன்படுத்தப்படும் என்று அர்த்தமல்ல. பலதரப்பட்ட சூழ்நிலைகளில் அணி வீரர்கள் எப்படி ஆடுகின்றனர், கையாள்கின்றனர் என்பதைப் பார்த்து சமச்சீரான ஒரு அணியை தேர்வு செய்வதற்காக முயற்சிகள் எடுக்கிறோம். 

ஏறக்குறைய உலகக்கோப்பை அணி உத்தரவாதமாகி விட்டது, பல்வேறு சேர்க்கைகள் குறித்து இந்தத் தொடரில் பரிசோதித்து என்ன மாதிரியான சேர்க்கைப் பொருத்தமாக இருக்குமென்பதைப் பார்த்தோம். உலகக்கோப்பை போன்ற முக்கியத் தொடர்களுக்கு முன்பாக நாம் உத்தரவாதமாக உறுதியாக இருக்க வேண்டுமல்லவா?

நிச்சயமாக பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் சில பகுதிகள் சரி செய்யப்பட வேண்டியவைதான் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்தத் தொடர் சென்ற விதம் ஒரு அருமையான கற்றுக்கொள்ளும் அனுபவமாகும்.

இவ்வாறு கூறுகிறார் சஞ்சய் பாங்கர். 

இந்தத் தொடரில் வைத்து அனுபவம் பெறவோ, அல்லது பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளவோ தினேஷ் கார்த்திக்கை அணியிலிருந்து தூக்கியாகி விட்டது, இப்போது இந்த அணிச்சேர்க்கை உ.கோப்பையில் பயன்படுத்தப் பட மாட்டாது என்றால் தினேஷ் கார்த்திக்கை உள்ளே கொண்டு வரப்போகிறாரா? அப்போது இந்தத் தொடரில் ஆடாதவரை எப்படி தேர்வு செய்தார்கள் என்ற கேள்வி எழாதா? 

மேலும் ஏற்கெனவே உலகக்கோப்பை அணி உத்தரவாதம் ஆகி விட்டது என்றால், அந்த அணிக்கு இன்னும் வலுசேர்க்குமாறு புதிய வீரர்களான ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, மணீஷ் பாண்டே ஆகியோரை முயற்சி செய்து பார்த்திருக்கலாமே, பவுலிங்கில் உனாட்கட், ஏன் அஸ்வினைக் கூட முயற்சி செய்து பார்த்திருக்கலாமே? குல்தீப் யாதவ்தான் நிரூபிக்கப்பட்ட ‘நம்பர் 1’ பவுலராயிற்றே, அவருக்கு ஏன் ‘புதிய சூழ்நிலையில் எப்படி ஆடுகிறார்?’ என்ற சோதனையெல்லாம். 

சோதனை தேவைப்படுவது 3 போட்டிகளாக சொதப்பிய ரோஹித் சர்மா, ஷிகர் தவண், அம்பாதி ராயுடு, ராகுல், ரிஷப் பந்த் ஆகியோருக்கு என்றால் கோலி, தோனி, குல்தீப், சாஹல் போன்றோருக்கு முழு ஓய்வு அளித்து புதிய பவுலர்களை முயற்சித்திருக்கலாமே.

ஒரு புறம் ஸ்டார் பிளேயர்களின் மூலம் வியாபாரம் விளம்பரம் நன்றாக நடக்க வேண்டும் அதே வேளையில் உலகக்கோப்பை அணிக்கு நல்ல சேர்க்கைக்காகப் பார்க்கிறோம் என்றும் கூற வேண்டும். இது என்ன டபுள் லாஜிக்? என்ற கேள்வியை சஞ்சய் பாங்கருக்கு எழுப்புவோம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close