[X] Close

3 கேலரிகளை திறக்க ரசிகர்கள் கோரிக்கை


3

  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 08:06 am
  • அ+ அ-

இந்திய ராணுவத்தை அவமதித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பாமோரா கிராமத்தில் பாஜக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:நமது சிஆர்பிஎப் படையினர் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடியாகவும், நமது வீரர்களின் தியாகத்தின் மாண்பை காப்பதற்காகவும் பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப் படை சென்று அதிரடி தாக்குதல் நடத்தியது.

நாட்டு மக்கள் அனைவரும் இந்திய விமானப் படையின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, இந்த தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார். இதன் மூலமாக, நமது ராணுவத்தையும், உயிர்த் தியாகம் செய்த வீரர்களையும் அவர் அவமதித்துவிட்டார். இதற்காக, வரும் மக்களவைத்தேர்தலில் ராகுல் காந்திக்கும், காங்கிரஸுக்கும் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close