[X] Close

ஆரம்பமே ஆர்சிபி சொதப்பல்: விறுவிறுப்பற்ற முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 23:39 pm
  • அ+ அ-

தேமுதிக திமுக கூட்டணி பேச்சுவார்த்தை விவகாரம் துரைமுருகன் ஆம் என்று சொல்ல சுதீஷ் இல்லை என மறுக்க, அனைத்து தகவல்களையும் துரைமுருகன் கூற நான் பேசவில்லை என சுதீஷ் மறுக்க மோதல் வலுத்தது.

கோபத்தின் உச்சியிலிருந்த சுதீஷ் அண்ணன் துரைமுருகன் ஒரே ஊர்க்காரர் அவரும் நானும் பேசாத விஷயமில்லை. தனிப்பட்ட முறையில் பேசியதை வெளியில் சொல்லமாட்டேன் ஏனென்றால் என் வளர்ப்பு அப்படி, ஆனால் அவர் சொல்கிறார் அவர் அப்படி என்று தெரிவித்தார்.

பின்னர் ஒருபடி மேலேச் சென்று துரைமுருகன் என்னிடம் பேசும்போது கட்சியைப்பற்றியும் தனிப்பட்ட முறையில் கட்சித்தலைமைப்பற்றியும் பேசியதையும் வெளியில் சொல்லட்டுமா? என கோபமாக கேட்டார். இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்கள் கேள்விக்கு துரைமுருகன் பதில்:

சுதீஷ் திமுக தலைமை குறித்து பேசியதாக கூறுகிறாரே?

அவர் நாங்கள் காரில் வரும்போதுதான் பேசினார். அப்படியெல்லாம் அவர் சொன்னார் என்றால் சுதீஷின் மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்கு அவரே ஒரு குந்தகத்தை ஏற்படுத்துகிறார் என்று அர்த்தம். அவர் எனது நண்பர், இரண்டு முறை என்னை எதிர்த்து நின்றவர். எங்க ஊர்க்காரர். அவர் அப்படி சொல்கிறார் என்றால் வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close