[X] Close

வரலாறு திரும்பியது: 11 ஆண்டுகளுக்குப் பின் 100 ரன்களுக்குள் சுருண்ட ஆர்சிபி அணி.


11-100

  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 21:54 pm
  • அ+ அ-

துரைமுருகனை ரகசியமாக சந்தித்த தேமுதிக நிர்வாகிகள் ஊடகங்கள் சுற்றிவளைத்து கேட்டபோது தனிப்பட்ட சந்திப்பு என கூறினர். ஆனால் துரைமுருகன் கூட்டணிக்காக வந்ததாகவும் இடமில்லை என தெரிவித்ததாகவும் கூறினார்.

உங்கள் சந்திப்பை அனகை முருகேசன் உள்ளிட்டோர் மறுத்துள்ளார்களே?

ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட இவர்கள் இருவரை உடன் வைத்துத்தான் பேசினோம். தனிப்பட்ட முறையில் நான் பேசவில்லை. நேற்றே அவர்கள் சொல்லியிருக்கலாம். தனிப்பட்ட முறையில் பேச வந்தோம் கூட்டணிப்பற்றி பேசவரவில்லை என்று சொல்லியிருக்கலாம்.

ஆனால் எல்லாம் நடந்து முடிந்தப்பின் அவர்கள் கூறுவது, பாவம் அவர்கள் நிலைமையை நினைத்து பரிதாபமாகத்தான் உள்ளது.

தேமுதிகவின் கூட்டணிப் பேச்சுவார்த்தை செயல்பாடு இப்படி இருப்பதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவிரும்பவில்லை. ஆனால் ஒன்றுக்கேட்டேன், ஏன் இப்படி லேட்டாக வந்தீர்கள், திடீர்னு எங்கப்பக்கம் ஏன் வருகிறீர்கள் என்று கேட்டேன். அப்போது அனகை முருகேசன்தான் சொன்னார்.

மேலே இருப்பவர்கள் எல்லாம் அதிமுகக்கூடத்தான் போகணும்னு சொன்னாங்க ஆனால் எங்க மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரும் திமுகவுடன்தான் போகவேண்டும் என்று சொன்னார்கள் என்று சொன்னார்.

தலைவர் என்ன சொன்னார் என்று கேட்டேன், அப்படியென்றால் போங்க என்று சொன்னார் என்று தெரிவித்தார். நீங்கள் இங்கு வருவது உங்கள் தலைவருக்கு தெரியுமா? என்று கேட்டேன் அவருத்தான் அனுப்பி வைத்தார் என்றார்கள். துணைத்தலைவருக்கு தெரியுமா? என்று கேட்டேன். தெரியும் என்றார்கள்.

அவர்கள் மோகன்ராஜ், இளங்கோ இரண்டுப்பேரும்தான் பேசினார்கள். மோகன்ராஜ் என்னுடைய நண்பர், இளங்கோவையும் தெரியும். அனகை முருகேசனையும் எனக்கு தெரியாது. அவர்கள் அதற்கு பிறகு அமைச்சர்களுடன் அவர்கள் பேசி அங்கு சிக்கி இருப்பார்கள்.

திமுக நிலைப்பாடு என்ன கதவு அடைக்கப்பட்டுவிட்டதா?

எங்கள் நிலைமையைச் சொல்கிறோம். தோழமைக்கட்சிகளுக்கு சீட்டுகளை பகிர்ந்து அளித்துவிட்டோம். எங்களுடைய நிலைமை இது. இதில் ஏதாவது மேஜர் ஆபரேஷன் ச்ய்வது என்றால் தலைவர்தான் முடிவு செய்யவேண்டும். ஆகவே இனி தலைவர் ஆச்சு அவர்கள் ஆச்சு.

தம்பிதுரை நீங்கள் உள்ளே பேசியதை வெளியில் கூறியிருக்கக்கூடாது என்று கூறுகிறாரே?

நான் தவறாக ஒன்றையும் சொல்லவில்லையே. எங்கிட்ட ஊடகங்கள் வந்து கேட்டார்கள் சொன்னேன். நான் எழுந்துப்போனால் மறைப்பதாக ஊடகங்கள் சொல்வீர்கள் அல்லவா?

கூட்டணி கதவு அடைக்கப்பட்டதால் சேற்றைவாரி தூற்றுகிறார்களா?

பாவம் அவர்கள் நிறைய நொந்துப்போயுள்ளார்கள். அதனால் இதற்குமேலும் அவர்களை நான் புண்படுத்த விரும்பவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close