[X] Close

ஐபிஎல் 2019: பட்டையைக் கிளப்புவார்களா 5 பவர் ஹிட்டர்கள்?


2019-5

  • kamadenu
  • Posted: 21 Mar, 2019 20:08 pm
  • அ+ அ-

சிமென்ட் விலை உயர்வை குறைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டுமானத் துறையில் உள்ள 45 அமைப்புகளைத் திரட்டி போராட்டம் நடத்த நேரிடும் என்று இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) சென்னை பிரிவு தலைவர் டபிள்யூ.எஸ்.ஹபீத் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிமென்ட் உற்பத்திக்கு தேவைப்படும் சுண்ணாம்புக் கல், சாம்பல், ஜிப்சம் போன்ற மூலப்பொருட்களின் விலை உயரவில்லை. டீசல் விலையும் உயர்த்தப்படவில்லை. சிமென்ட் உற்பத்தி ஆலைகளின் 40 சதவீத உற்பத்தித் திறன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சிமென்டுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை உயர்த்தியுள்ளனர். அதனால் தமிழ்நாட்டில் ஜன.31-ம் தேதி வரை ஒரு மூட்டை சிமென்ட் ரூ.250-க்கு விற்கப்பட்டது. பிப்.1-ம் தேதி முதல் ரூ.350-க்கு விற்கப்படுகிறது. சில்லரை விலை ரூ.400 வரை விற்கப்படுகிறது. இதன் காரணமாக ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான வீடு உள்ளிட்ட கட்டுமானங்களின் 30 ஆயிரம் கட்டுமானத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (RERA) உத்தரவுப்படி நாங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். சிமென்ட் விலை உயர்வால் இது சாத்தியமில்லை. அடுக்குமாடி குடியிருப்பு கட்டும்போது ஒரு சதுர அடிக்கு ரூ.1,400 செலவாகும். சிமென்ட் விலை உயர்வால், ரூ.150 கூடுதலாக செலவாகும்.

இந்தக் கூடுதல் செலவினம் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படும். இந்த விஷயத்தில் அரசுஉடனடியாக தலையிட வேண்டும்.

இக் கோரிக்கையை முதல்வர், துணை முதல்வர், தொழில்துறை அமைச்சர் உள்ளிட்டோரை ஓரிரு நாளில் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். அதன் பிறகும் விலை குறைக்கப்படாவிட்டால், கட்டுமானத் துறையில் உள்ள 45 அமைப்புகளுடன் சேர்ந்து போராட நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close