[X] Close
 

நடுரோட்டில் விளையாடிய சச்சின் - வைரலாகும் வீடியோ


sachin-tendulkar-stuns-fans-by-joining-them-for-a-game-of-gully-cricket

  • இந்து குணசேகர்
  • Posted: 17 Apr, 2018 17:37 pm
  • அ+ அ-

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின்,  நடுரோட்டில் நின்றுக் கொண்டு கிரிக்கெட் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

200 டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100 சதம் என ஏராளமான சாதனைகளைப் படைத்தவர். 2010-ல் குவாலியரில் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 200 ரன்களைக் குவித்து உலக கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார்.

2013ஆம் ஆண்டு அனைத்துத் தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் சச்சின். சச்சின் ஓய்வு பெற்று நான்கைந்து ஆண்டுகள் முடிவுறும் நிலையிலும் அவருக்கான நட்சத்திர வெளிச்சம் குறையாமல் உள்ளது. அதற்கு உதாரணமாய் தெரு ஒன்றில் கிரிக்கெட் ஆடும் சச்சினின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close