[X] Close

ஒரு நாள் போட்டியில் விதிமீறல்: பவுல்ட், மஹ்மத்துல்லாவுக்கு அபராதம்


bowled

  • kamadenu
  • Posted: 18 Feb, 2019 10:03 am
  • அ+ அ-

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது விதிகளை மீறி களத்தில் மோசமாக நடந்துகொண்ட நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் டிரென்ட் பவுல்ட், வங்கதேச வீரர் மஹ்மத்துல்லா ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அபராதம் விதித்துள்ளது.

வங்கதேசம், நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூஸிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது.

இந்தப் போட்டியின்போது டிரென்ட் பவுல்ட்டும், மஹ்மத்துல்லாவும் விதிகளை மீறி களத்தில் நடந்துகொண்டது குறித்து போட்டி நடுவரிடம் புகார் செய்யப்பட்டது. டிரென்ட்பவுல்ட் பந்துவீசும்போது, ஆபாசமான வார்த்தைகளை அவர் பேசியது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீதத் தொகையை அவர் அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதைப் போலவே வங்கதேச வீரர் மஹ்மத்துல்லா, ஆட்டமிழந்து திரும்பியபோது எல்லைக் கோட்டை, தனது கிரிக்கெட் மட்டையால் அடித்து விட்டுச் சென்றார். இதையடுத்து போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவீதத் தொகையை அவர் அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.

மேலும் இரு வீரர்களுக்கும் தலா டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. முதன் முறையாகஇதுபோன்ற தவறுகளில் ஈடுபடுவதால் அவர்களுக்கு ஒரு டிமெரிட்புள்ளி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்றதவறுகளைச் செய்யும்போதுவழங்கப்படும் புள்ளிகள் அவர்களது ஒழுங்கீனக் கணக்கில் சேர்க்கப்படும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close