[X] Close

கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் பெங்கால் வீரர் அசோக் தின்டா காயம்


cricket-ball

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 10:11 am
  • அ+ அ-

கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் பெங்கால் அணி வீரர் அசோக் தின்டா காயமடைந்தார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மைதானத்தில்டி20 கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியில் பெங்கால் வீரர்கள்நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெங்கால் அணி வீரர் பிரேந்தர் விவேக் சிங் பந்தைத் தூக்கியடித்தார். பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த அசோக் தின்டா அந்த பந்தை கேட்ச் செய்ய முயன்றார். ஆனால் பந்து அவர் கையில் பட்டு தெறித்து நெற்றியில் விழுந்தது. இதில் அவர் காயமடைந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரை 2 நாட்கள் ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர்கூறும்போது, “நெற்றியில் காயமடைந்த அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்கேனும் எடுக்கப்பட்டது. அவர் தற்போது நன்றாக இருக்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு ஸ்கேன் எடுத்தோம். அவரை 2 நாட்கள் ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்” என்றார். - பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close