[X] Close

ஐசிசி டி20 தரவரிசை: குல்தீப் மிகச்சிறப்பு; ரோஹித் அபாரம்


yadav-jumps-to-second-spot-india-trail-pakistan-in-team-table

  • போத்திராஜ்
  • Posted: 11 Feb, 2019 14:10 pm
  • அ+ அ-

 

துபாய், பிடிஐ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ், பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மா சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் குல்தீப் யாதவ் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசி ஆட்டத்தில், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி குல்தீப் அசத்தியதால், 728 புள்ளிகள் பெற்று பந்துவீச்சாளர்கள் வரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். தரவரிசையில் குல்தீப்பின் உயர்ந்த அளவு முன்னேற்றமாகும். மற்றவகையில் முதல் 10 இடங்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஒருவரும் இடம் பெறவில்லை. யஜுவேந்திர சாஹல் 6 இடங்கள் பின்தங்கி 17-வது இடத்திலும், புவனேஷ்குமார் 18-வது இடத்திலும் நீடிக்கிறார். முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் உள்ளார்.

3-ம் இடம் முதல் 10-ம் இடங்கள் வரை முறையே, சதாப் கான்(பாக்), இமாத் வாசிம் (பாக்), அதில் ரஷித்(இங்கி), சகிப் அல் ஹசன்(வங்க), ஈஷ் சோதி(நியூசி), பாகிம் அஷ்ரப்(பாக்), சான்ட்னர்(நியூசி.) ஆகியோர் உள்ளனர்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3 இடங்கள் முன்னேறி, 7-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். கே.எல்.ராகுல் 10-ம் இடத்துக்கு பின்னடைந்துள்ளார். ஷிகர் தவண் 11-வது இடத்தில் நீடிக்கிறார்.

முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் உள்ளார். 2-ம் இடம் முதல் 6-ம் இடம் வரை முறையே கோலின் முன்ரோ, ஆரோன் பிஞ்ச், எவின் லூவிஸ், மேக்ஸ்வெல், பக்கர் ஜமான் ஆகியோர் உள்ளனர். 8-ம் இடத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ், 9-வது இடத்தில் ஜேஸன் ராய் இடம் பெற்றுள்ளனர்.

விராட் கோலி டி20 தொடரில் இடம் பெறாததால், 19-வது இடத்தில் ஜிம்பாப்வே வீரர் மசகாட்சாவுடன் உள்ளார்.

டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசி, பேட் செய்த குர்னல் பாண்டியா, 39 இடங்கள் முன்னேறி, 58-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் 12-வது இடத்திலும், ராஸ் டெய்லர் 51-வது இடத்திலும் உள்ளனர்.

அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் 135 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 124 புள்ளிகளுடன் இந்திய அணி 2-ம் இடத்திலும் 118 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும்,118 புள்ளிகளுடன் இங்கிலாந்து 4-ம் இடத்திலும் உள்ளன.

ஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், 116 புள்ளிகளுடன் நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன. மேற்கிந்தியத்தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் முறையே 7 முதல் 10 இடங்களில் உள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close