[X] Close

வெற்றியைத் தவறவிட்டாலும், ஏராளமான இனிய நினைவுகளுடன் செல்கிறோம்: ரோஹித் சர்மா உருக்கம்


disappointed-with-t20-series-loss-but-lots-of-positives-from-nz-tour-rohit

  • போத்திராஜ்
  • Posted: 10 Feb, 2019 18:21 pm
  • அ+ அ-

 

ஹேமில்டன், பிடிஐ

வெற்றியைத் தவறவிட்டது வேதனையளித்தாலும், நியூசிலாந்து பயணத்தில் ஏராளமான இனிய நினைவுகளைச் சுமந்து கொண்டு செல்கிறோம் என்று இந்தியஅணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

தென் துருவநாடுகளான ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு மறக்கமுடியாத வெற்றிகள் கிடைத்தன. ஆஸ்திரேலியாவில் வரலாற்றுச் சாதனையாக டெஸ்ட், ஒருநாள் தொடரைக் கைப்பற்றி, டி20 தொடரைச் சமன் செய்தது இந்தியஅணி. நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் 10 ஆண்டுகளுக்குப்பின் வென்றது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4 ரன்களில் இந்திய அணி தோற்றது.

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், " இந்த டி20 தொடரை இழந்தது வேதனையளித்தாலும், நாங்கள் மோசமாகத் தோற்கவில்லை. மிகக் கடினமான இலக்கைக் கடைசிவரை துரத்திச் சென்று எட்டாமல் விட்டுவிட்டோம். 213 ரன்களை 20ஓவர்களில் அடைவது கடினமானது. தோல்வி என்பதைவிட வெற்றியை விட்டுவிட்டோம். கடைசி ஓவரில் பதற்றப்படாமல் யார்கர்களை வீசி நியூசிலாந்து வீரர்கள் கட்டுப்படுத்திவிட்டார்கள்.

நியூசிலாந்து தொடரில் ஏராளமான நல்ல, சாதகமான விஷயங்கள் நடந்துள்ளன. ஒருநாள் தொடரை சிறப்பாகத் தொடங்கினோம். இந்தத் தொடரில் வீரர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர், கடினமாக உழைத்தனர். இன்று இரவு வருத்தமளித்தாலும், தவறுகளில் இருந்து அதிகமாகக் கற்றுக்கொண்டு, அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வோம் " எனத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு வரும் ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டி வரும் 24-ம் தேதி விசாகப்பட்டிணத்தில் நடைபெறுகிறது.

இந்தவெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் கூறுகையில், " டி20 கிரிக்கெட் போட்டிக்குச் சிறந்த விளம்பரமாக இந்தப் போட்டி அமைந்தது. அதிகமான ஸ்கோர்கள். முதல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டோம், 2-வது போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றோம். இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கடினமான போட்டியைக் கொடுத்தன. இதில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டதால், வெற்றி பெற்றோம் " எனத் தெரிவித்தார்

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close