[X] Close

நியூசி.யை துரத்தும் தோல்வி: ஒரு நாள் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி : மந்தனா, மிதால் அபாரம்


mandhana-stars-again-in-indian-women-s-series-clinching-win-against-nz

பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மிதாலி ராஜ்

  • போத்திராஜ்
  • Posted: 29 Jan, 2019 13:30 pm
  • அ+ அ-

 

மவுண்ட் மவுங்கினி, பிடிஐ

ஸ்மிரிதி மந்தனா, மிதாலி ராஜின் அபாரமான பேட்டிங் ஆகியவற்றால், நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற இந்திய மகளிர் அணி முன்னிலை வகித்து தொடரை வென்றுள்ளது.

முதலாவது ஒருநாள் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-16-ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஷிப் லீக் சுற்றில் இந்திய மகளிர் அணியை 1-2 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்ததுநியூசிலாந்து அணி. அதற்கு இந்த பழிதீர்க்கும் விதமாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடரும் ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டிக்கான சுற்றுப்போட்டி என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 44.2 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அணியில் அதிகபட்சமாக சாட்டர்வெய்ட் 71 ரன்கள் சேர்த்தால் மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்மிழந்தனர்.

இந்தியத் தரப்பில் கோஸாமி 3 விக்கெட்டுகளையும், பூனம் யாதவ், பிஸ்த், சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 35.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 166 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

தொடக்க வீராங்கனைகளாக ரோட்ரிக்ஸ், மந்தனா களமிறங்கினர். இதில் 2வது ஓவரில் ரோட்ரிக்ஸ் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த சர்மா 8 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். இதனால், 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

3-வது விக்கெட்டுக்கு மந்தனாவுடன் கேப்டன் மிதாலி ராஜ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தனர். இருவரும் தங்கள் இயல்பு ஆட்டத்துக்குத் திரும்பிய பின்னர் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி ஸ்கோரை விரைவுப்படுத்தினர். மந்தனா 54 பந்துகளில் அரைசதம் அடித்தார், மிதாலி ராஜ் 102 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மந்தனா 90 ரன்களிலும் (13பவுண்டரி,ஒருசிக்ஸர்), மிதாலி ராஜ் 63 ரன்களிலும்(4பவுண்டரி, 2 சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 151 ரன்கள் சேர்த்தனர்.

22 வயதான மந்தனா சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். கடந்த 10 இன்னிங்ஸில் 8-வது முறையாக அரைசதம் அடித்துள்ளார். இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் 105 ரன்கள் அடித்தார் மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close