[X] Close

இந்திய அணி எங்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறது: தொடரை இழந்த நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சன்


kane-williamson-india-wins-series-2019-newzealand

  • முத்துக்குமார்
  • Posted: 28 Jan, 2019 17:37 pm
  • அ+ அ-

நியூஸிலாந்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை இந்திய அணி எந்த விதப் பிசிறும் இல்லாமல் முழு ஆதிக்கத்தை வெளிப்படுத்தி தொழில்நேர்த்தியுடன் 3-0 என்று கைப்பற்றியதையடுத்து நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

இன்று 3வது ஒருநாள் போட்டியில் 65 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நியூஸிலாந்து சவாலான இலக்கை நிர்ணயிக்க தவறி 243 ரன்களுக்குச் சுருண்டது, இந்திய அணி இலக்கை 43 ஓவர்களில் முடித்தது. 

நியூஸிலாந்து அணியில் டக்கி பிரேஸ்வெல் புதிய பந்தில் சரியாக வீசவில்லை அவர் 6 ஓவர்களில் 49 ரன்களை விட்டுக்கொடுத்தது இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தது, இதனால் இந்திய அணியின் வெற்றியை நியூஸிலாந்தால் நிறுத்த முடியாமல் போனது. 

தொடரை இழந்த ஏமாற்றத்தில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது:

இந்திய அணி எங்களுக்குப் பாடம் கற்பித்து வருகிறது, அந்தச் சவாலை எதிர்கொள்ள மீண்டு எழுந்து நிற்க வேண்டும். இன்று சிறு முன்னேற்றம் தெரிந்தது, ஆனால் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும், இன்னும் முன்னேற்றம் காட்ட வேண்டும்.

இந்தப் பிட்சில் உத்வேகம் பெற்று ஆடுவது சுலபமல்ல. ராஸ் டெய்லர் பிரமாதமாக ஆடினார்.

பந்த் வீச்சில் சுமாராகச் செயல்படுகிறோம். ஆனால் தொடக்கத்தில் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்துவது அவசியம். 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close