[X] Close

ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் 1000 விக்கெட்டுகள் சாதனை: மே.இ.தீவுகள் அபார பேட்டிங்குக்குப் பிறகு சரிவு


james-anderson-stuart-broad-england-wi-1st-test-2019

  • முத்துக்குமார்
  • Posted: 24 Jan, 2019 15:59 pm
  • அ+ அ-

பார்பேடோஸில் நேற்று தொடங்கிய மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. இதில் உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

பிராட் தற்போது அணியில் இல்லாவிட்டாலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 567 விக்கெட்டுகளையும் பிராட் 433 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 1000 விக்கெட்டுகளை ஜோடியாகக் கைப்பற்றிய கூட்டணியாயினர். 

கிளென் மெக்ரா, ஷேன் வார்ன் கூட்டணி 104 டெஸ்ட்களில் 1001 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். முரளிதரன், சமிந்தா வாஸ் 95 போட்டிகளில் 895 விக்கெட்டுகளை இணைந்து கைப்பற்றியுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்திய ஜோடியாக ஹர்பஜன், கும்ப்ளே 54 போட்டிகளில் 501 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

முதல் நாள் ஆட்டமான நேற்று மே.இ.தீவுகள் நன்றாக ஆடியது. 240/4 என்ற நிலையிலிருந்து ஆண்டர்சனின் பந்து வீச்சில் மடிந்து 264/8 என்று ஆனது.  அதிரடி வீரர் ஹெட்மையர் 60 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக உள்ளார். 

அறிமுக தொடக்க வீரர் கேம்பெல் 53 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் என்று அதிரடி முறையில் விரைவு கதியில் ரன்கள் சேர்த்தார். பிராத்வெய்ட் 130 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 40 ரன்கள் என்று ஒரு புறம் பொறுமை காட்டினார்.  கேம்பெல்,  சாம் கரனை 4 பவுண்டரிகள் விளாசினார். ஆண்டர்சன் தன் 8 ஓவர்களில் 5 ரன்களையே கொடுத்தார். முதல் நாள் ஆட்டத்தில் 12 மெய்டன்களுடன் 24 ஒவர்கள் வீசினார், 4 விக்கெட்டுகள், மொத்தம் அவரது டெஸ்ட் விக்கெட்டுகள் கணக்கு 569 ஆனது.

கேம்பெலை மொயின் அலி ஸ்வீப் ஷாட்டில் பீட் செய்து எல்.பி.யில் வெளியேற்றினார். கேம்பெல் ஆட்டமிழந்தவுடன் பிராத்வெய்ட் பாயந்தார், மொயின் அலியை 2 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசினார். ஷேய் ஹோப் இறங்கி பென் ஸ்டோக்ஸை உணவு இடைவேளைக்கு முன்பாக இரண்டு துல்லிய ஆஃப் ட்ரைவி பவுண்டரிகளை அடித்தார். 

பிறகு 15 ஓவர்க்ள் பவுண்டரியே வரவில்லை, மீண்டும் ஷேய் ஹோப்தான் ஆண்டர்சனை ஆஃப் திசையில் 2 பவுண்டரிகளை அடித்து வறட்சியை முடித்து வைத்தார்.  இதில் 2வது பவுண்டரி மிகச் சிறந்த கவர் ட்ரைவ் ஆகும். ஆனால் பிராத்வெய்ட் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஸ்டோக்ஸிடம் வெளியேறினார். டேரன் பிராவோ 2 ரன்களில் ஸ்டோக்ஸிடம் எல்.பி.ஆகி வெளியேற 128/3 என்று ஆனது. ஷேய் ஹோப் தன் 5வது டெஸ்ட் அரைசதத்தை எடுத்தார். 57 ரன்கள் எடுத்த ஷேய் ஹோப் கடைசியில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் அயராத ஆஃப் ஸ்ட்ம்ப் லைனுக்கு இன்சைடு எட்ஜ் ஆனார்.  உடனேயே ஹெட்மையரும் வெளியேறியிருக்க வேண்டும், ஆனால் ஜோஸ் பட்லர் எக்ஸ்ட்ரா கவரில் கேட்சை விட்டார், அப்போது ஹெட்மையர் 3. 

கேட்ச் விட்டதற்காக இங்கிலாந்தை தண்டித்த ஹெட்மையர் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 60 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார், ஸ்டுவர்ட் சேஸ் 118 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆண்டர்சனிடம் வெளியேற ஆண்டர்சன், பிராட் ஜோடி 1000 விக்கெட்டுகள் வீழ்த்தக் காரணமானார். புதிய பந்தில் சேசை வீழ்த்தியவுடன் டவ்ரிச் புல்ஷாட் கேட்ச் ஆனது, ஹோல்டருக்கு தானே கேட்ச் எடுத்து வெளியேற்றினார் ஆண்டர்சன்.  கிமார் ரோச் டக்கில் ஸ்டோக்ஸிடம் வெளியேற மே.இ.தீவுகள் 240/4 என்ற வலுவான நிலையிலிருந்து 268/8 என்று ஆனது.  ஹெட்மையர் களத்தில் நிற்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close