[X] Close

ஐசிசி ஒருநாள், டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு: ரிஷப் பந்த்துக்கு புதிய விருது


virat-kohli-sweeps-icc-awards-after-sensational-year-in-tests-and-odis

  • போத்திராஜ்
  • Posted: 22 Jan, 2019 12:04 pm
  • அ+ அ-

 

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று அறிவித்த சிறந்த ஒருநாள் அணி, டெஸ்ட் அணி ஆகியவற்றுக்கு கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

வளர்ந்து வரும் இளம் வீரர் விருது ரிஷப்பந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ண்டுக்கான சிறந்த ஒருநாள் அணி, டெஸ்ட் அணி, வீரர்கள், கேப்டன், வளர்ந்து வரும் வீரர் உள்ளிட்ட விருதுகளை ஐசிசி அறிவித்து வருகிறது. இதில் சிறந்த ஒரு நாள் அணியையும், டெஸ்ட் அணியையும் ஐசிசி தேர்வு செய்துள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டில் விராட் கோலி 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் உள்பட 1,322 ரன்கள் சேர்த்து 55.08 சராசரி வைத்துள்ளார். 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 6 சதங்கள் உள்ளிட்ட 1,202 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும், ஐசிசி ஒருநாள், டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையிலும் கோலி முதலிடத்தில் இருந்தார்.

அணியைப் பொருத்தவரை டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியும், ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், இந்திய அணி 2-வது இடத்திலும் உள்ளது.

கடந்த 2018 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை இந்திய அணி 6 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் வெற்றிகளை இந்திய அணி பெற்றது. ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 வெற்றிகளும், 4 தோல்விகளும், ஒரு போட்டி சமனிலும் முடிந்தன.

ஐசிசி அறிவித்துள்ள டெஸ்ட் அணியில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், கோலி ஆகிய 3 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் போட்டிக்கான அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் மற்றும ஒருநாள் அணியில் பும்ரா இடம் பெற்றுள்ளார்.

மேலும், ஐசிசி டெஸ்ட் அணியில் நியூசிலாந்தில் இருந்து கேன் வில்லியம்ஸன், டாம் லதாம்,ஹென்ரி நிகோலஸ் ஆகிய 3 வீரர்களும், மேற்கிந்தியத்தீவுகளில் இருந்து ஜேஸன் ஹோல்டர் மட்டும் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து நாதன் லயன் மட்டும் இடம் பெற்றுள்ளார்.இலங்கையில் இருந்து திமுத் கருணாரத்னேவும், பாகிஸ்தானில் இருந்து முகமது அப்பாஸ், தென் ஆப்பிரிக்காவில் இருந்து காகிசோ ரபாடா இடம் பெற்றுள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் அணி:

டாம் லதாம்(நியூசி.), திமுத் கருணாரத்னே(இலங்கை), கேன் வில்லியம்ஸன்(நியூசி.), விராட் கோலி(கேப்டன்), ஹென்ரி நிகோலஸ்(நியூசி.), ரிஷப் பந்த்(இந்தியா), ஜேஸன் ஹோல்டர், காகிஸோ ரபாடா, நாதன் லயன், ஜஸ்பிரித் பும்ரா, முகமது அப்பாஸ்(பாக்)

ஒருநாள்போட்டிக்கான அணியில் இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ், பும்ரா, கோலி ஆகியோரும், இங்கிலாந்தில் இருந்து, ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷித் கானும், வங்கதேசத்தில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மானும், நியூசிலாந்தில் இருந்து ரோஸ் டெய்லர் மட்டும் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால், இலங்கை, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணியில்களில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ஒருநாள் அணி:

ரோஹித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, விராட் கோலி, ஜோ ரூட், ரோஸ் டெய்லர், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், முஸ்தபிசுர் ரஹ்மான், ரஷித் கான், குல்தீப் யாதவ், ஜஸ்பிர்த் பும்ரா

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close